மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த லெஜண்ட் படத்திற்கு பிறகு நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் லயன். இரண்டு முறை ரிலீஸ் தேதியில் மாற்றம் கண்ட லயன் மேல் எதிர்பார்ப்பு இருப்பது இயல்பே. அறிமுக இயக்குனர் சத்ய தேவ் மீது நம்பிக்கை வைத்து பாலைய்யா நடித்திற்கும் லயன் ரசிகர்களின் நம்பிக்கையையும், கைத்தட்டலையும் பெற்று இருக்கின்றதா?
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு மருத்துவமனையின் பிணங்கள் அறை காண்பிக்கப்படுகின்றது. அங்கு வைக்கப்பட்டு இருக்கும் பிணங்களில் ஒன்றின் கால் லேசாக அசைகிறது. பின்னர் உடம்பு முழுவதும் அசைகிறது. அது தான் போஸ் (பாலைய்யா).அவர் யார் என்றே அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மெமரி லாஸ் ஆகியிருக்கின்றது. அவர் தன்னுடைய பெயர் போஸ் என்றும், தான் ஒரு சி பி ஐ ஆபீசர் என்றும் நினைத்து கொள்கிறார். இந்நிலையில் அவருடைய பெற்றோரான சந்திர மோகன் மற்றும் ஜெய சுதா ஆகியோர் பாலைய்யாவின் பெயர் கோட்சே என்றும் அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் செயல் தலைவர் என்றும் கூறுகின்றனர். அந்த நிறுவனத்தின் தலைவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அதனை ஏற்க மறுக்கின்றார். இதனை அடுத்து அவர் தனது வீட்டை தேடி செல்கிறார். அப்போது மகா லக்ஷ்மியை (திரிஷா) சந்திக்கிறார். அவர் தன்னுடைய காதலி என்றும் அவர் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறார் என்றும் போஸ் நினைக்கிறார். ஆனால் இது உண்மை அல்ல என்று மகாலக்ஷ்மி மறுக்கிறார். இதனிடையே போஸ் ஒரு வீட்டை பார்த்து அது தன்னுடைய வீடு என்றும் அங்கிருக்கும் சலபதி ராவ் தான் தனது தந்தை என்றும் போஸ் நினைக்கிறார். மேலும் சரயு (ராதிகா ஆப்தே) தான் மனைவி என்றும் நம்புகிறார்.உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில் டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திரிஷா கூறுகிறார். அதனை அடுத்து அவருக்கு டெஸ்ட் எடுக்கப்படுகின்றது. அதில் அவர் கோட்சே தான் என்றும் அவரது பெற்றோர் சந்திர மோகன் மற்றும் ஜெய சுதா தான் என்றும் உறுதி செய்யப்படுகின்றது. இதனை அடுத்து ஹீரோ தனது பழைய ஞாபகங்களில் இருந்து மீண்டு வருகின்றாரா? அல்லது சலபதி ராவ் தான் தந்தை என்று தொடர்ந்து நினைக்கின்றாரா?மகாலக்ஷ்மியை திருமணம் செய்கிறாரா? அல்லது ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று நம்புகின்றாரா?இந்த கேள்விகளுக்கு பதில் தருவதுதான் இந்த படத்தின் மீதிக்கதையாகும்.
பாலைய்யா தனது நடிப்பில் மிளிர்கிறார். அதுவும் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்து இருக்கிறார். படத்தில் அவர் பேசும் வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தரும். சண்டை காட்சிகளிலும் மிரட்டி இருக்கின்றார். திரிஷாவுக்கு என்றே உருவாக்கப்பட்ட வேடம் போலும். அந்த அளவிற்கு அவர் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருக்கிறார். அவருக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கின்றது. இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் என்றாலும் ராதிகா ஆப்தே நிறைவாகவே நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர் தனது பாணியில் அசத்தி இருக்கிறார்.
படத்தின் இசை அமைப்பாளர் மணி ஷர்மாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். குறிப்பாக பின்னணி இசையில் நம்மை மெய் மறக்க செய்து விடுகிறார். பாடல்களுக்கு பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் நிச்சயம் நடனமே ஆடும் அளவிற்கு சிறப்பாக உள்ளது. புதிய கதைக்களத்தை வைத்துக்கொண்டு களத்தில் இறங்கிய அறிமுக இயக்குனர் சத்ய தேவ் சில இடங்களில் திணறி இருக்கிறார். அவரது அனுபவமின்மை தெரிந்து விடுகிறது. குறிப்பாக திரைக்கதையில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். படத்தில் சஸ்பென்சுக்கு குறைவில்லை. பிரபல எடிட்டர் கொடகிரி வெங்கடேஸ்வர ராவ் இன்னும் கத்திரியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்திற்கு சம்பந்தம் இல்லாத சில காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கும். பிரபல தயாரிப்பாளரான ருத்ரபடி ரமண ராவ் பட்ஜெட் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளது நன்கு தெரிகின்றது.
மொத்தத்தில் லயனின் கர்ஜனை மிரட்டவில்லை....

0 comments:
Post a Comment