திருட்டி வி.சி.டி. புழக்கத்தை ஒழிக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 'சண்முகா' திரையரங்க நிர்வாகம் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படங்களையும் ஒரு முறை பார்க்கலாம்.பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம்.
இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.மேலும் 10,000 வரை டிக்கெட்டுகள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதிவு திட்டத்தைப் பரவலாக்கவும் தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருட்டு வி.சி.டி. களை ஒழிக்கவும், அதிக அளவில் ரசிகர்களை ஈர்க்கவும் திரையரங்கு தரப்பினர் இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் உள்ளூர் நகைக் கடையொன்றில் இந்த டிக்கெட் வாங்குபவர்கள், ஒரு சவரன் நகையை வாங்கினால் அவர்களுக்கு ரூ.1250 தள்ளுபடி செய்யப்படும். இந்த புதிய திட்டத்தில்,டிக்கெட்டை வாங்கியவர்கள் திரையரங்கிற்கு வரலாம்.கிடைக்கும் இருக்கையில் அமர்ந்து படத்தைப் பார்க்கலாம்.இதனால் திருட்டு வி.சி.டி. புழக்கம் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

0 comments:
Post a Comment