ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் ரஜினி

ரஜினி, மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ணப் போகிறார்....என்றும் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்க,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலான படத்தில், ரஜினி நடிக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி படத்தை துவக்குவதற்கு முன்னரே, ரஜினியிடம் ஒரு கதையை கூறியிருந்தார். அப்போது ரஜினி, வேறுபடங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், அவரால், அப்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இயலவி்ல்லை.

பின் அக்கதையை சிரஞ்சீவியிடம் கூறுமாறும், மேலும் அதற்கு தயாரிப்பாளர் பெயரை பரிந்துரைத்ததும் ரஜினி என்பது தான் குறிப்பிடத்தக்கது. அந்த படம் தான், சிரஞ்சீவி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ஸ்டாலின் படம்.... இதன்பின்னர், ஏ.ஆர்.முருகதாசை சந்தித்த ரஜினி, நான் இன்னும் சில படங்களில் தான் நடிப்பேன்.

அதில் ஒரு படம் உங்கள் படம் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான காலம் உருவாகி விட்டதாக, ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top