தொடர்கிறது ரிலீஸ் மழை: இந்த வாரமும் 11 படங்கள் வெளிவருகிறது

கடந்த வாரம் வெளிவந்ததைப்போல இந்த வாரமும் 11 படங்கள் வெளிருகிறது. தமிழ் சினிமாவில் எல்லா பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக சுமார் 500 படங்களுக்கு மேல் இருக்கிறது.

சிறு சிறு பிரச்னைகள், வெளியீட்டுக்கும் விளம்பரத்துக்கும் பணம் இல்லாமல் அவை முடங்கிக் கிடக்கின்றன. அவை இப்போது ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

அத்துடன் தயாரிப்பாளர் சங்கம் 3 மாதத்திற்கு எந்த படங்களையும் வெளியிடாமல் தொழில் முடக்கம் செய்யலாம் என்கிற நிலையும் இருப்பதால் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

படம் ஒடுகிறதோ இல்லையோ, ரிலீசாவது செய்து விடுவோம்  என்கிற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை படங்கள் வெளிவருகிறது. வருகிற 13ந் தேதி வெள்ளிக்கிழமை, கதம் கதம், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், சொன்னாப் போச்சு, இரவும் பகலும் வரும், தவறான பாதை, வானவில் வாழ்க்கை, ஐவராட்டம், மகாபலிபுரம் ஆகிய 9 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகிறது.

அதோடு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள சங்கராபரணம் படமும், பிளாக் அண்ட் ஒயிட் என்ற ஆங்கில படமும் வெளிவருகிறது. இதில் கதம் கதம், ராஜதந்திரம், ஆகியவை மீடியம் பட்ஜெட் படங்கள் மற்ற படங்கள் சிறுபட்ஜெட் படங்கள்.

ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவருவதால் தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரே தியேட்டரில் 3 படங்கள் ரிலீசாகிறது. காலைக் காட்சிக்கு ஒரு படம், பகல் காட்சிக்கு ஒரு படம், இரவுக் காட்சிக்கு ஒரு படம் என பிரித்து திரையிடுகிறார்கள். திங்கட்கிழமை பாதிபடங்கள் தயாரிப்பு அலுவலகத்திற்கே திரும்பி வந்துவிடும் என்பதும் கசப்பான உண்மை.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top