டண் கணக்கா அளக்குறாங்கப்பா! செய்தியும் ‘பொய் ’தியும்!

ரஜினியை வைத்து படம் தயாரிக்க யாருக்குதான் ஆசை இருக்காது? கடந்த பல வருடங்களாகவே புற்று முளைத்து ஃபுல் மூன் கரைகிற வரைக்கும் ரஜினி கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் பலருக்கும் அவரை பார்த்து ஒரு ஹலோ சொல்கிற அதிர்ஷ்டம் கூட வாய்த்ததில்லை. அது ஒருபுறமிருக்க ‘யாருக்கு வேணும்னா படம் பண்ணலாம். எக்சப்ட் டூ பர்சன்’ என்று தனக்கு தானே கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர்களில் ஒருவர் கே.டி.குஞ்சுமோன். அந்த இன்னொருவர் யார்? அவர்தான் இப்போதைய நியூஸ் நாயகன்.

பெட்டி நிறைய கோடிகளோடு போய் இறங்கிய கே.டி.குஞ்சுமோன், (இப்போதல்ல, அவர் பீக்கில் இருந்த நேரம் அது) ‘எவ்ளோ வேணும் உங்க கால்ஷீட்டுக்கு? இது போதுமா, இன்னும் வேணுமா?’ என்று கேட்க, ‘ஸாரி… உங்க அப்ரோச் தப்பாயிருக்கு. கிளம்புங்க ப்ளீஸ்’ என்று அனுப்பி வைத்துவிட்டார் ரஜினி. அது பழைய காலம். என்ன காரணத்தாலோ தமிழ்சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் என்று பெயரெடுத்திருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் அந்த லிஸ்ட்டில்தான் வைத்திருந்தார் ரஜினி.

இன்னும் அந்த விட்ட குறை தொட்ட குறை விலகவில்லை போலிருக்கிறது. கடந்த சில தினங்களாக மீடியாவில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு செய்தி. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க அதில் ரஜினி நடிக்கப் போகிறார் என்பதுதான் அது. இந்த படத்தை ஷங்கர் இயக்கப் போவதாக அடிஷனல் பிட் வேறு! ‘இந்த படத்தை எந்த விநியோகஸ்தருக்கும் விற்கக்கூடாது. நேரடியாக நீங்களே தியேட்டர் எடுத்து ரிலீஸ் பண்ண வேண்டும்’ என்று ரஜினி கோரிக்கை வைத்ததாகவும் அளந்து தள்ளினார்கள்.

நிஜத்தில் நடந்தது என்ன?

வேறொரு விஷயமாக ரஜினியை சந்தித்தாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அது மட்டும்தான் உண்மை. இருவரும் இணைந்து படம் செய்யும் முயற்சியிலிருக்கிறார்கள் என்பதெல்லாம் கற்பனையே! அதைவிட தமாஷ்… ஷங்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறவில்லையாம். அதற்கே களிம்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார் அவர். மறுபடியும் ஷங்கருக்கு படமா? பேசாம அதுக்கு ராமேஸ்வரம் ரயில்ல தொங்கிகிட்டே பயணம் போவலாம் என்று கிசுகிசுக்கிறது ஆஸ்கர் ரவி ஏரியா!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top