பிரச்சனை இன்னும் சால்வ் ஆகல?


வசந்தகுமாரன்’ படம் தொடர்பாக விஜய் சேதுபதிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படியோ ஒரு செய்தி கிளம்பி ‘எகிடுதகிடாக’ சுற்றி வருகிறது கோடம்பாக்கத்தில். ‘இனி அந்த படத்தில் நடிக்கவே மாட்டேன். அந்த படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம்னு கேட்டு சரியா ஒரு தொகையை சொல்லுங்க. கொடுத்துடுறேன்’ என்று கூறிவந்த விஜய் சேதுபதி எப்படி மடங்கினார் என்றெல்லாம் ஆச்சர்யம் கிளப்பி வந்தவர்களுக்கு, இப்போது நாம் சொல்லப் போகும் தகவல் ஷாக் ரகம்.

இருவருக்கும் இடையேயான பிரச்சனை அப்படியே நீரு பூத்த நெருப்பாகதான் இருக்கிறதாம். சமாதானம் ஏற்படவில்லையாம். நடுவில் பஞ்சாயத்து பேசியவர்களும் கூட தற்போது ஒதுங்கியே இருக்கிறார்களாம். பிரச்சனை வெடிக்கக் கூடிய நேரம் இதுவல்ல. விஜய் சேதுபதியின் நெக்ஸ்ட் ரிலீசான ‘நானும் ரவுடிதான்’ சமயத்தில்தான் அது நடக்கும் என்கிறார்கள்.

இதற்கிடையில் இதையெல்லாம் தாண்டி ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த விஜய் சேதுபதியும், ஸ்டூடியோ 9 சுரேஷூம் எங்காவது பொது இடங்களில் பார்த்தால் புன்னகை பூத்துக் கொள்கிறார்கள். நலம் விசாரித்துக் கொள்கிறார்கள். அதையெல்லாம் வைத்துதான் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்று கணக்கு போடுவதாக கோடம்பாக்கத்தின் குறுகுறுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுகிறது ஒரு குரூப்!

பிரச்சனைன்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு இருந்துதானே ஆகணும்?

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top