அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்

அழகு, திறமை இருந்தும் சினிமாவுக்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்த சின்னத்திரை தொகுப்பாளர்களில் அர்ச்சனாவும் ஒருவர். இளமை புதுமை, நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர்.

பல பெரிய நட்சத்திர கலைவிழாக்களில் தொகுப்பாளராக இருந்தவர். பல இயக்குனர்கள் சினிமா வாய்ப்போடு அர்ச்சனாவை அணுகியும் சினிமா வாய்ப்புகளை தவிர்த்தவர். இப்போது ஆர்.கே, சிருஷ்டி டாங்கே நடிப்பில் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கிறார்.

ஷாஜி கைலாஷ் இயக்கிய என் வழி தனி வழி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அர்ச்சனா தொகுத்து வழங்கினார். அப்போது ஷாஜி அர்ச்சனாவிடம் "உங்களுக்கு அருமையான கேரக்டர் ஒன்று இருக்கிறது நடியுங்கள்" என்று கூற பெரிய இயக்குனர் அழைக்கும்போது அதை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹீரோயின்களில் ஒருவரான இனியாவின் அக்காவாக நடிக்கிறார். ஆம்பூரில் பிரியாணி கடை நடத்தும் அட்ராசிட்டி பெண்ணாக நடிக்கிறார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top