தானு (கங்கனா ரனாவத்), மானு (மாதவனை) திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். அவர்களது வாழ்க்கை 4 ஆண்டுகள் கழித்து அவர்களது வாழ்க்கையை எடுத்துக்கூறுவதாக, தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஈகோவால், இருவருக்கும் மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து, கவுன்சிலிங்கிற்காக, லண்டன் செல்கின்றனர். பின் அவர்கள் இந்தியா திரும்புகின்றனர். அப்போது தானு, தன்னுடைய முன்னாள் காதலரான ராஜா அஸ்வதியை (ஜிம்மி ஷெர்கில்) பார்க்கிறார். உருவத்தி்ல் தானுவை ஒத்திருக்கும் டட்டூவை (கங்கனா ரனாவத்) மானு பார்க்கிறார். உடனடியாக காதலில் விழுகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை...
தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் எல் ராய், இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை நிகழ்த்தியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் அதிக ரிஸ்க்கள் இருந்தபோதிலும் அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். படம் விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெற்றிக்கு, ஹிமான்சூ சர்மாவின் கதை மற்றும் வசனம் முக்கிய பங்கு என்றே கூற வேண்டும். ஹிமான்சூர் சர்மா மற்றும் ஆனந்த் எல் ராய் இணைந்து வெற்றிக்காவியத்தை படைத்துள்ளனர். ராஜ்சேகரின் கைவண்ணத்திலான பாடல்கள் மற்றும் தனிஷக் அண்ட் வயுவின் இசையிலான பாடல்கள், கேட்போர் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கங்கனா ரனாவத் நிறைந்திருந்தபோதிலும், அவரின் நடிப்பு எவ்விடத்திலும் சலிப்பை ஏற்படுத்துவதாக இல்லாததே, படத்தின் பெரும்பலம். இந்த படத்தின் மூலம், மாதவன் மீண்டும் வெள்ளித்திரையில் பிரவேசித்துள்ளார். மாதவன் ஒவ்வொரு காட்சியிலும் நிறைவான நடிப்பை தந்து, இழந்திருந்த ஃபார்மை, இதன்மூலம் மீட்டுள்ளார். ஸ்வரா பாஸ்கர், இஜாஜ் கான், ஜிம்மி ஷெர்கல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக உள்ளது.
கங்கனாவின் உணர்ச்சிமிகு நடிப்பு, மாதவனின் கொள்ளை அழகு, தீபக்கின் டைமிங் காமெடி உள்ளிட்டவைகள், ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் அழகுற ஜொலித்துள்ளன.
அனைவரும் பார்க்கவேண்டிய படம்

0 comments:
Post a Comment