ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12, 2014 அன்றுஅவர் நடித்த ‘லிங்கா’ படம் வெளியிடப்பட்டது.
விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கும், தியேட்டர்காரர்களுக்கு அநியாயவிலைக்கும் விற்பனை செய்யப்பட்டதால் லிங்கா படம் தோல்வியைத் தழுவியது.
படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் ரஜினியிடமிருந்து 33 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ச்சியாக போராட்டங்கள், உண்ணாவிரதம், பத்திரிகையாளர் சந்திப்புகள் என இறங்கினர் விநியோகஸ்தர்கள்.
ஒருகட்டத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் என்ற பெயரில் ரஜினியை அசிங்கப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட முயன்றநிலையில்….
தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் என்ற விநியோகஸ்தரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
விநியோகஸ்தர்கள் கேட்ட 33.5 கோடியை தர இயலாது என்று தெரிவித்த ரஜினி தரப்பு, பேச்சுவார்த்தையின் இறுதியில் 12.5 கோடி தருவதாக வாக்குறுதி அளித்தது.
அதன்படி தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் ரஜினிகாந்த் தரப்பில் பணத்தை கொடுத்திருப்பதாக அப்போது விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.
அந்தப் பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ‘லிங்கா’ பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துள்ளனர்.
பல மாதங்கள் கடந்துவிட்டநிலையிலும், மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லையாம்.
இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படாததினால் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர் விநியோகஸ்தர்கள்.
விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….
“திருச்சி ஏரியா -1.39 கோடி, நெல்லை ஏரியா – 80 லட்சம், செங்கல்பட்டு – 2.30 கோடி, மதுரை ஏரியா – 1.40 கோடி என மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
பணத்தை தாணுவிடம் கேட்டால், ”திருப்பூர் சுப்பிரமணியனிடம் இருக்கிறது” என்கிறார். திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டால் பாக்கிப்பணம் மதுரை அன்புவிடம் இருக்கிறது என்றார். சில நாட்கள் கழித்து கேட்டால், ”பணமெல்லாம் இல்லை” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக கருதுகிறோம்.
ரஜினியின் தூதராக செயல்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்.
உண்மையிலேயே திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியின் தூதுவர்தானா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது.
இனியும் பொறுமை காக்கும் நிலையில் இல்லை. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட ‘லிங்கா ‘ பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் இடைத்தரகர் தலையீடு இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
‘லிங்கா’ பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவீஸ் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.
12.50 கோடிக்கு ஒப்புக்கொண்டபோது விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவீஸ், தியேட்டர்காரர்கள் எப்பிரச்சினையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.
MG (மினிமம் கியாரண்டி) அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தரவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.
எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க ‘லிங்கா’ படத்தை MG அடிப்படையில் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்த நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விநியோகஸ்தர் சிங்காரவேலன் சொன்ன தகவல் அதிர்ச்சி ரகம்.
“லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்தில் சாந்தமாகப் போராடிய எங்களை உண்ணாவிரதம், போராட்டம் என்று தீவிரமாக செயல்படச் சொன்னவரே திருப்பூர் சுப்பிரமணியம்தான். ரஜினிக்கு எதிராக எங்களை உசுப்பிவிட்டதே அவர்தான். என்னிடம் அவர் பேசியதை என் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் ரஜினியிடம் காட்டுவேன்” என்று திருப்பூர் சுப்பிரமணியத்தின் துரோகத்தை வெட்டவெளிச்சமாக்கினார்.
ஆக.. துரோகியை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார் ரஜினி?

0 comments:
Post a Comment