சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.
வழக்கிலிருந்து ஜெயலலிதா முழுமையாக விடுதலையான தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் முதல் வாழ்த்தை அபிராமி ராமநாதன் அறிக்கையாக வெளியிட்டார்.
அதில், "தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல சோதனைகளை கடந்து அந்த சோதனை களையெல்லாம் வெற்றி சாதனைகலாக்கிய பெருமைக்குரியவர்.
பெண்களின் கண்களாக இருக்கும் நம்முடைய கலைத்துறையின் மூத்த சகோதரி "அம்மா" என்று நாடு முழுவதும் இருக்கும் மக்களால் போற்றப்படும் தாங்கள் மீண்டும் அரியணையில் அமர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன், இறைவி ஆசியால் "அம்மா' உங்களுக்கு நீண்ட நெடிய அயுளை தந்து நல்ல உடல்நலத்துடன் சேவையாற்ற ஒட்டுமொத்த திரையுலகின் சார்பில் பிராத்திக்கிறோம். அம்மா வருக... உங்கள் நல்லாட்சி தொடரட்டும்," என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment