பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் முதல்பாடல் வெளியீட்டுநிகழ்ச்சி இன்று மாலை சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா என்கிற அந்தப்பாடல் நேற்றே இணையதளங்களில் வெளியாகவிட்டாலும் இன்றுதான் முறைப்படி வெளியிடப்படுகிறதென்று சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரிலுள்ள பெரியஅரங்குகளில் ஒன்றான இந்தியன்ஹெரிடேஜ் அரங்கில் இன்று மாலை ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறதாம். இந்தஅரங்கு கிடைப்பதே பெரியவிசயம். ஒரு தமிழ்ப்படவிழாவுக்கு இந்தஅரங்கைக் கொடுத்திருப்பது வியப்புக்குரிய செய்தி என்று சொல்கிறார்கள். இன்றுமாலை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்திசுரேஷ், இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்.
மேடையிலேயே அந்தப்பாடலை இமானும் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடுவதோடு ரசிகர்களோடு கலந்துரையாடலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்றைக்கு இணையதளங்களில் வெளியான அந்தப்பாடலுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு தந்த உற்சாகத்தோடு படக்குழு ரசிகர்களைச் சந்திக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சிவகார்த்திகேயன், இமான், யுகபாரதி ஆகியோர் தங்களுடைய டிவிட்டர்பக்கத்தில் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment