பென்டிரைவ் விலை இருமடங்காக வாய்ப்பு!

தகவல்களை சேமிக்க உதவும் மின்னணு சாதனமான பென் டிரைவ்களின் விலை இரட்டிப்பாக உயரும் எனத் தெரிகிறது.

சீனாவில் இருந்து குறைந்த விலை பென் டிரைவ்கள் இந்திய சந்தைகளில் குவிந்து வருவதாக மோசர் பேயர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருந்தன. இது தொடர்பாக ஆய்வு நடத்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் பென் டிரைவ் ஒவ்வொன்றுக்கும் 200 ரூபாய் வரை பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க நிதியமைச்சகத்துக்கு பரிந்துரை அளித்திருந்தது. இது நிதியமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

பென் டிரைவ்கள் விலை உயர்ந்தால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி இந்திய மின்னணு சாதன நிறுவனங்களின் சங்கம் எதிர்த்துள்ளது. பென் டிரைவ்களுக்கு பொருட் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுவது ஒருசில நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றும் இதற்கு பதிலாக உள்நாட்டில் பென் டிரைவ் உற்பத்திச் செலவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top