இவனுக்கு தண்ணியில கண்டம் - விமர்சனம்-கம்மா தண்ணில யாருக்கு கண்டமில்லை!

தமிழ் சினிமாவின் எளிதான வெற்றி பார்முலா தான் காமெடி, அந்த நகைச்சுவை களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதில் சிறியதாக ஒரு அட்வைஸ் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெளிவந்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது, என்று சொல்லி வந்த நிலையில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசால்டாக நுழைந்து ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். அதே வரிசையில் சின்னத்திரை தொகுப்பாளர் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் இவனுக்கு தண்ணில் கண்டம்.

கதை

படம் ஆரம்பிக்கும் போது சரக்கு, பார் என்று தொடங்க, இந்த படத்திலுமா என்று கேட்டாலும், கருத்தே இதில் தான் இருக்கிறது. தீபக் தன் ஊரில் ஒரு சிறிய தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளர். இவரின் திறமையை அறிந்த ஊர் பெரியவர் ஒருவர் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

இங்கு அவருக்கு ஒரு முன்னணி தொலைக்காட்சியில் வேலை கிடைக்க, பிரபலமான ஷோவில் நாம் தொகுத்து வழங்க போகிறோம் என்று எண்ணி கொண்டிருந்த அவருக்கு மிட் நைட்டில் ஒளிப்பரப்பாகும் பலான ஷோவில் தான் தொகுப்பாளர் வேலை கிடைக்கிறது. இவருக்கு வரும் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறிக்க, அவர் மீது கோபம் கொள்கிறார் தீபக்.

பின் ஒரு பணக்கார வீட்டின் சம்மந்தம் தீபக்கிற்கு வர, திருமணத்தை தடபுடலாக செய்தால், மாமனாரின் முழு சொத்தும் கிடைக்கும் என கட்டபஞ்சாயத்து செய்யும் சூடு பாஸ்கர் என்பவரிடம் ரூ 5 லட்சம் கடன் வாங்க, பெண் திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஓடி விடுகிறார்.

அதே சோகத்தில் வீடு திரும்பும் போது ஹீரோயின் நேகாவிடம் நட்பு வர பின் அது காதலாக மாறுகிறது. இவரின் முன்னேற்றத்திற்காக ஒரு பிரபல தொலைக்காட்சியிடம் நேகா சிபாரிசுக்கு செல்ல, நம்மை இவர் ஏமாற்றுகிறார் என நினைத்து தீபக் கோபத்தில் வாழ்க்கை வெறுத்து குடிக்க ஆரம்பிக்கிறார்.

இதை தொடர்ந்து இவருக்கு பிடிக்காதவர்கள் ஒருவர் ஒருவராக இறக்க, ஒரு போனில் மொட்ட ராஜேந்திரன் குரல் மட்டும் ‘என்னப்பா இப்போ சந்தோஷமா’ என்று கேட்கிறது. ஏன் இவர்கள் இறக்கிறார்கள், இந்த வரிசையில் தன் காதலியின் பெயரையும் இருப்பதை அறிய, அவரை காப்பாற்றினாரா என்பது தான் மீதிக்கதை.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு

படத்தின் யானை பலம் என்றால் மொட்டை ராஜேந்திரன் தான். டேய் எண்ட்ரீ டெரரர் தாண்ட, இடையில தான் காமெடியன ஆயிட்டேன், மறுபடியும் களத்தில இறங்குறேனு, மிரட்டி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். தீபக் ஒரு ஹீரோவாக கண்டிப்பாக பாஸ் மார்க் தான். கதாநாயகி நேகாவும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்.

தீபக்கின் நண்பராக வரும் செண்ட்ராயின், குமரவேலும் கேப் கிடைக்கும் இடத்தில் தான் சிரிப்பு வெடியை கொழுத்தி போடுகின்றனர். படத்தின் மற்றொரு காமெடி பூஸ்டாக சுவாமிநாதன். தீபக்கை கண்டு ‘மலடியாக இருந்த என் மணைவியை குழந்தையுடம் மெலடி பாட்டு கேட்க வைத்தது’ நீங்க தான் பாஸ் என அதகளம் செய்கிறார்.

இசையமைப்பாளர் ஏ7, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷன் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்

மொட்டை ராஜேந்திரன் தான், தன் வாய்ஸ், face எக்ஸ்பிரஷன் என அனைத்திலும் சிக்சர் தான். இரண்டாம் பாதி படத்தின் மிகப்பெரிய பலம், ராஜேந்திரன் எடுக்கும் முயற்சி, அதில் ஏற்படும் யதார்த்தமான் தோல்வி சிரித்து வயிறு புண்ணாக புல் கேரண்டி. இதற்காகவே இயக்குனரை நம் மனம் விட்டு பாராட்டலாம்.

பல்ப்ஸ்

முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது. மற்றபடி பெரிதாக ஏதும் இல்லை.

மொத்தத்தில் கம்மா தண்ணில யாருக்கு கண்டமில்லை, காய்ச்சுகிற தண்ணியில் தான் அனைவருக்கும் கண்டம் என்ற நல்ல கருத்துடன், புல் மீல்ஸ் பொழுதுபோக்கு படமாக உள்ளது இவனுக்கு தண்ணில கண்டம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top