கதம் கதம் அடித்தது அரை சதம் - திரை விமர்சனம்..!,

சூப்பர் ஸ்டார் ரஜினி்காந்தின் பிரபலமான பஞ்ச் வசனம் படத்தின் தலைப்பாக இருப்பதால் என்னவோ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஒரே கோட்டில் நேர்மையானவன், நேர்மையற்றவன் என மன நிலை உள்ள இரண்டு போலிஸ்காரர்கள் பற்றிய கதை தான் இந்த கதம் கதம்.

சதுரங்க வேட்டை படத்தி்ன் வெற்றிக்கு பிறகு நட்ராஜும், நீண்ட நாட்களாக வெற்றிக்கு முயற்சித்து வரும் நந்தாவும் தான் படத்தின் நாயகர்கள். இப்படத்தின் மூலம்

பிரபல இயக்குனர் தூயவனின் வாரிசான பாபு தூயவன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

கதை

நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக இருக்கும் நந்தா பல இடங்களில் Transfer ஆகி பொள்ளாச்சிக்கு எஸ்.ஐ ஆக வருகிறார். ஊரில் எவருமே போலிஸை மதிப்பதில்லை, காரணம் அங்கு கான்ஸ்டபுள் முதல் டி.எஸ்.பி வரை அனைவருமே லஞ்சத்தில் ஊறிப்போகியிருக்கின்றனர்.

பல தவறுகளை செய்யும் அந்த மாவட்ட எம்.பிக்கு முக்கிய விசுவாசியாக இருக்கிறார் இன்ஸ்பெக்டர் நட்ராஜ். இதனால் அங்கு நேர்மையாக இருக்க முடியாமல் தவிக்கிறார் நந்தா. ஒரு சந்தர்ப்பத்தில் நந்தா செய்யும் ஒரு நல்ல காரியத்தை, தான் செய்ததாக நட்ராஜ் பேர் வாங்கி கொள்கிறார்.

இதனால் தனக்கு துரோகம் செய்ததாக நினைத்து நட்ராஜை கொல்ல முயற்சிக்கிறார் வில்லன். இதனால் வெகுண்டெழுந்த நட்ராஜ் என்ன முடிவெடுக்கிறார், நேர்மையாக வாழும் நந்தாவின் அடுத்த கட்டம் என்ன என்பதே பரபரப்பான இரண்டாம் பாதி.

நடிகர், நடிகைகள் பங்களிப்பு

படம் முழுவதும் விறைப்பான போலிஸ் அதிகாரியாக வருகிறார் நந்தா. காதல் காட்சிகளிலும் ரொமான்ஸ் செய்ய முயற்சித்திருக்கிறார். கதாநாயகியாக வரும் சனம் ஷெட்டி பாடலுக்கு வந்து போகும் கதாபாத்திரமாக தான் உள்ளார்.

படத்தின் முக்கிய தூணே நட்ராஜ் தான் படம் முழுவதும் நக்கல் கலந்த நெகட்டிவ் ரோலில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

நட்ராஜின் நடிப்பு தான் படத்தின் முக்கிய பலமே, வால்டர் வெற்றிவேல் மாதிரியே பீல் பண்றான், அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்யா, என ஆங்காங்கே வரும் வசனங்கள் தான் சிரிப்பு வெடியாக உள்ளது, படத்தின் பாடல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.

பல்ப்ஸ்

கமர்சியல் கலவைக்காக படத்தில் வரும் கிளாமர் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வில்லன் கதாபாத்திரம் மனதில் நிற்கவில்லை.

போலிசாரின் வாழ்க்கை மற்றொரு கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கார் இயக்குனர்.

மொத்தத்தில் கதம் கதம் அடித்தது அரை சதம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top