டாப் ஸ்டார், டவர் ஸ்டார், வெல்டிங் ஸ்டார், வில்லங்க ஸ்டார், விவகார ஸ்டார் என்று கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் உயிருக்கு அச்சுறுத்தல் விடும் நட்சத்திரக் கூட்டம்தான். ஏதோ ஸ்டார் ஜெராக்ஸ் கடையில் ரூவாய்க்கு நாலு பட்டம் கிடைப்பது போல பெயருக்கு முன் இஷ்டத்துக்கு பட்டம் போட்டுக் கொள்ளும் இந்த ஹீரோக்கள் வரிசையில் மேலும் ஒரு ஸ்டார். இவர் கோல்டு ஸ்டார் கோபிகாந்தி! இதற்கு முன் ‘முதல் மாணவன்’ என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்து பார்ப்பவர் நெஞ்சங்களையெல்லாம் கொள்ளை கொண்ட அழகு பையன்!
அந்த படத்தில் ஒரு கூலித்தொழிலாளி எப்படி மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி வெற்றி பெற்றார் என்பது கதை. அது மட்டுமா? இவருக்கு இரண்டு ஜோடிகள். தலா நயன்தாரா, ஹன்சிகாவுக்கு நடுவில் சிக்கிய சிம்புவாக நம்ம கோபி காந்தி காதல் புரிகிற காட்சிகளையெல்லாம் பார்த்துவிட்டு, வீட்டுக்கு போக வழி தெரியாமல் நாலைந்து நாட்களாக தெருவிலேயே சுற்றி திரிந்தார்கள் ரசிகர்கள்! அவர்களின் நாடு தழுவிய பிரார்த்தனையை அடுத்து இவர் மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த முறை இவர் மாணவன் அல்ல. ஃபைட்டர்!
மலைவாழ் இளைஞரான கோபிகாந்தி எப்படி மாநில சண்டை போட்டியில் முதலிடம் பிடிக்கிறார் என்பதுதான் இவரது அடுத்த படம். டைட்டில் வீரக்கலை! இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே தொழில்காரன் என்ற இன்னொரு படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார் கோபிகாந்தி. ஸாரி… கோல்டன் ஸ்டார் கோபிகாந்தி. ‘இப்பவே என் படத்தை வெளியிட கார்ப்பரேட் நிறுவனங்கள் க்யூவில நிக்குது தெரியுமா?’ என்று அவர் சொல்வதை கேட்டு துணுக்குற வேண்டியிருக்கிறது.
இந்த படங்களின் துவக்க விழாவை மிஸ்டர் சனீஸ்வரன் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு பகுதியில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் கோபிகாந்த். வீரக்கலை படத்தை ராஜ் என்ற புதியவர் இயக்கி வருகிறார். தொடு திரை நான்… தொடுவிரல் நீ என்ற பாடலை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் பாலபாரதி. ஜெஸி இசையமைத்திருக்கிறார்.
எப்ப ரிலீஸ் எப்ப ரிலீஸ்… என்று தவிக்கும் உள்ளங்களுக்கு . ‘யாரும் அவசரப்படாதீங்க. கோடை விடுமுறைக்கு தியேட்டர்ல இருப்பேன்’ என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார் கோபிகாந்தி.
மக்களே… அதுக்கப்புறம் உங்க இஷ்டம்!

0 comments:
Post a Comment