கேரள மக்களுக்கு தமிழ் படங்கள்தான் பிடிக்குது! போட்டுத்தாக்கும் வில்லன்

படத்திலிருக்கும் இவரை கொஞ்சம் முடியோடு கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கண்களுக்கு அபிஷேக் பச்சன் தெரிந்தால், உங்களுக்கு வாசன் ஐ கேர் எங்கிருக்கிறது என்கிற ரூட் மேப்புக்கு அவசியம் இல்லை! சமீபத்தில் வெளிவந்த ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தில் ரொம்ப கெட்டவனாக நடித்திருப்பவர்தான் இவர். பெயர் சர்வஜித். மலையாளத்துல சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சுருக்கேன். தமிழ்ல ‘எத்தன்’ என்னோட முதல் படம். அதில் கொடூரமான வட்டிக்காரனா நடிச்சிருந்தேன். அதற்கப்புறம் ஏ.வெங்கடேஷ் இந்த கதையை எங்கிட்ட சொன்னார். நான்தான் இந்த தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி படமா எடுக்க வச்சேன் என்கிறார்.

ஆங்… அந்த அபிஷேக் பச்சன் மேட்டரை விட்டாச்சே? கேரளாவில் ஒரு பள்ளிக் கூடத்தில் சிறப்பு விருந்தினராக போயிருந்தாராம். அங்குதான் இவரை பார்த்துவிட்டு அபிஷேக் பச்சன் என்று குழந்தைகள் கொண்டாடி ஆட்டோகிராப் வாங்கினார்களாம். ஜுனியர் அபிஷேக் என்றே கையெழுத்து போட்டிருக்கிறார் இவரும். (பார்றா)

பொதுவா தமிழ்நாட்ல எடுக்கிற படங்கள்தான் எல்லா வகை மக்களுக்குமானதா இருக்கு. ஏ.பி.சி ன்னு எல்லா ஏரியாவுக்கும் படம் எடுக்கிறாங்க. ஏ சென்டர் படங்கள்னும் தனியா வருது. அதனால் இங்கு ஒரு நல்ல நடிகனா பெயரெடுக்கணும். என்னோட தோற்றம் பார்த்து ஹீரோவா நடிங்கன்னு கூட சொல்றாங்க. ஆனால் எனக்கு வில்லன் கேரக்டர்ல நடிக்கணும்னுதான் ஆசை என்றார் சர்வஜித்.

ரொம்ப நல்லவண்டா நீ படத்திற்கு தமிழ்நாட்ல எல்லா இடத்திலேயும் நல்ல ரிவ்யூ கிடைச்சிருக்கு. அதை வச்சுகிட்டு இங்க எப்படியாவது ஒரு இடத்தை பிடிச்சுரணும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்தாலும், இதே படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கிறது. தமிழ்ல வர்ற படங்களை அப்படியே அங்க மொழி மாற்றம் பண்ணாம ரிலீஸ் பண்றாங்க. ஜனங்களும் தமிழ் படங்களை விரும்பி பார்க்குறாங்க. அதனால் நான் இந்த படத்தை அப்படியே கேரளாவில் ரிலீஸ் பண்றதா இருக்கேன் என்றார்.

ஒரு ஹீரோவை வில்லனாகவே வச்சுருக்குமா தமிழ்சினிமா? போக போக பார்க்கலாம் அதன் சாமர்த்தியத்தை!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top