கத்தாழக் கண்ணாலே பாடலை விட்டுத்தொலைக்க மாட்டாங்க போலிருக்கே?

டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஜெ.வடிவேல்! அதைவிட சிறப்பு தகுதி இவர் ஆனந்தவிகடனின் முன்னாள் நிருபர். ‘நானும் சந்தோஷும் ரூம்ல ஒண்ணாதான் தங்கியிருந்தோம். எங்க பேச்சு, மூச்சு எல்லாமே சினிமா சினிமான்னுதான் இருந்திச்சு. அடிக்கடி பேட்டிக்காக ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமை சந்திச்சு அவருகிட்டயே அசிஸ்டென்ட்டா சேர்ந்துட்டாரு சந்தோஷ். நான் மிஷ்கினிடம் சேர்ந்தேன். இதோ… எங்க கனவு நிறைவேறிடுச்சு. எங்களின் முதல் படம் கள்ளப்படம்’! என்கிறார் வடிவேல்.

ஆச்சர்யம் என்னவென்றால், இந்த படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்களின் வீட்டு கதவை தட்டிவிட்டு கால் கடுக்க காத்திருக்காமல், இந்த கதையில் நாங்களே நடிக்கிறோம் என்று தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவனிடம் கேட்க, கடவுளே நேர்ல வந்த மாதிரி, அதுக்கென்ன? ஜமாய்ங்க அண்ணனுங்களா என்று கூறிவிட்டார் அவர். இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லாரும் சேர்ந்து நடிக்க,  கேரவேன், ஜுஸ், கால் மேல் கால் போட்ட ராஜகட்டளை என்று எதுவும் இல்லாமல் படமே முடிந்துவிட்டது- ‘படத்துலேயும் எங்க எங்க வேலையை நாங்களே செஞ்சுருக்கோம். செய்யுற மாதிரி நடிச்சும் இருக்கோம்’ என்கிறார் வடிவேல்.

இப்போது தமிழ்சினிமாவில் ‘சுட்ட’கதைகளின் ராஜ்ஜியம்தான். இது எந்த உதவி இயக்குனரிடமிருந்து சுட்டது? என்ற கேள்வியை வெகுவாக ரசித்தார் வடிவேல். இங்கிருக்கிற ஒவ்வொரு உதவி இயக்குனர்களிடமிருந்தும் இந்த கதையை சுட்ருக்கோம் சார். இந்த கதையே உதவி இயக்குனர் ஒருவர் எப்படி படம் இயக்க வர்றார் என்பதுதானே? இந்த கதைக்குள் எல்லாருடைய கதையும்தான் இருக்கு என்றார்.

படத்தில் கத்தாழ கண்ணாலே… ஸ்டைலில் ஒரு பாடலை வைத்திருக்கிறார்கள். அந்த பாடலுக்கு இசையமைத்தவரும் கே தான். இந்த பாடலுக்கு இசையமைத்தவரும் கே தான். ஏனிந்த காப்பி என்ற கேள்விக்கு பாய்ந்தடித்துக் கொண்டு பதில் சொன்னார் வடிவேல். ‘நான் மிஷ்கின் சாரோட அசிஸ்டென்ட். அவரு சும்மாவே இருக்க மாட்டாரு. அவர் படத்தில் பாடலே இல்லேன்னாலும் தினம் ஒரு பாடலை எழுதி கம்போஸ் பண்ணுவாரு. அப்படிப்பட்டவருக்கு அவருடைய பாடலையே அர்ப்பணிச்சா எப்படியிருக்கும்? அதனால்தான் அதே ஸ்டைல்ல ஒரு பாடலை வச்சுருக்கோம்’ என்றார். நல்லவேளை… ட்ரெய்லரில் தென்பட்ட காட்சிகளில் எல்லாம் காலுக்கு மேலேயும் கேமிரா மேய்ந்திருக்கிறது. ஆக மிஷ்கினின் சாயல் அந்த ஒரு பாட்டில்தான் போலிருக்கிறது.

தாண்டவக்கோனே… எங்களையெல்லாம் தப்பிக்க வச்சுருவதானே!?

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top