விஸ்வரூபம் படத்தை தடுத்த தயாரிப்பாளர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற கமல் மறுப்பு.?!

கமலஹாசன் நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை அவர் தியேட்டரில் வெளியிடுவதற்கு முன் டிடிஎச்.ல் வெளியிட திட்டமிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் படத்தை வெளியிட முடியாது என்று அறிக்கை வெளியிட்டனர்.

தனது படத்தை தடுத்து நிறுத்தி தொழில் செய்ய விடாமல் தடுப்பதாக கமலஹாசன் காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கமலஹசானுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

அபிராமி ராமநாதன், மற்றும் பன்னீர் செல்வத்துக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. கமலஹாசனின் உத்தம வில்லன் படம் வெளிவரும் சூழ்நிலையில், கமலஹாசன் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உத்தம வில்லன் படத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் கமலை சந்தித்து சமரசம் பேசியுள்ளதாக தெரிகிறது.காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் வழக்கு தொடர்ந்து விட்டால் அதனை வாபஸ் பெற முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கமல் கூறிவிட்டாராம். விதிக்கப்படும் அபராத தொகையை, அல்லது வழக்கு செலவை ஏற்கும்படி கமலை கேட்டதாகவும். அதற்கும் அவர் மறுத்து விட்டதாகவும்  கூறப்படுகிறது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top