பாலிவுட்டின் டாப்ஸ்டார் அமீர்கானுக்கு இன்று(மார்ச் 14ம் தேதி) 50வது வயது. ஆனால் தான் 18 வயதை போன்று உணர்வதாக கூறியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சேர்ந்தது. கடைசியாக வெளிவந்த பி.கே., படம் இந்திய சினிமா வரலாற்றில் அதிகளவு வசூலை குவித்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது மல்யுத்த வீரர் மகாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாற்று படமான டங்கல் படத்தில் நடித்து வருகிறார். இதில் இரண்டு பெண்களுக்கு அப்பாவாக நடிக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில், அமீர்கானுக்கு இன்று 50வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான் பேசியதாவது, எனக்கு 50 வயதாகிவிட்டது. ஆனால் அப்படி ஒரு உணர்வே இல்லை, 18 வயது இளைஞனாகத் தான் உணர்கிறேன்.
இன்று நான் ஒரு உயரிய இடத்தை தொட்டுவிட்டதாக பேசுகிறார்கள் ஆனால் நான் அப்படி உணரவில்லை. ஒருவன் உயர்ந்த நிலைக்கு சென்றால் கட்டாயம் ஒருநாள் அவனுக்கு சரிவு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment