அந்த மிரட்டல் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது! ஓட விடுகிறார் கமல்

‘ஒழுங்கா சரணடைஞ்சுடு. இல்லேன்னா எங்க சங்கம் உங்களுக்கு ரெட் போடும்’ என்று யாராவது மிரட்டினால், மிரட்டியவர்களுக்கு இனி கண்டம்தான்! தொழில் நுட்ப விஷயத்தில் புதுசு புதுசாக கண்டுபிடிக்கும் கமல், தன்னை மிரட்டியவர்களுக்கும் புதுசாக ஒரு வழி கண்டு பிடித்து புகார் கொடுத்தில் ஆச்சர்யமில்லை. காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா என்கிற ஆணையம் பற்றி அதிகம் அறிந்திராதவர்கள் கூட, இப்போது எதற்கெடுத்தாலு சிசிஐ ல கம்ளைன்ட் பண்ணுவேன், தெரியும்ல? என்று எகிறுகிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. இந்த கமிஷனில் நேரடியாக புகார் கொடுத்தது கமல் இல்லையென்றாலும், கமல் சார்பாக இந்த புகாரை தட்டிவிட்டவர் அவரது அண்ணன் சந்திரஹாசன்.

என்ன விஷயம்? எதற்காக?

விஸ்வரும் பட வெளியீட்டின் போது, இந்த படத்தை அப்படியே டிடிஎச் ல் வெளியிடும் முயற்சியில் இறங்கினார் கமல். விஞ்ஞான வளர்ச்சியோடு போட்டி போட முடியாது. ஆனால் அதை நம் கைக்குள் போட்டுக் கொள்ள முடியும் என்பது கமலின் சிந்தாந்தம். ஆனால் பழம் பெருச்சாளிகள், கமலுக்கு ரெட் போடுவோம். அவரது எந்த படத்தையும் எந்த தியேட்டரிலும் வெளியிட மாட்டோம் என்று எழுத்துபூர்வமாக எச்சரிக்கை அனுப்ப, வசமாக சிக்குச்சுடா புலி என்று அருவாமனையோடு கிளம்பிவிட்டார் கமல். எங்கு சுளுக்கு ஏற்படுத்தினால் எங்கு வலிக்கும் என்பதை புரிந்தவராச்சே!

இந்த காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவில் இவர்கள் மீது புகார் கொடுத்துவிட்டார். இது நடந்து சில மாதங்கள் ஆனாலும் வழக்கு இப்போது வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர் தரப்புக்கு பல கோடிகள் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில்தான் கமலை சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்களான பன்னீர் செல்வமும், அபிராமி ராமநாதனும் வழக்கை வாபஸ் பெற சொல்லி கேட்டார்களாம். அந்த ஆணைய சட்டதிட்டபடி வழக்கு போடலாம். வாபஸ் வாங்கவெல்லாம் முடியாதாம். அதற்கு வாய்ப்பு இல்லையே என்று கூறிவிட்டார் கமல்.

சரி, வழக்குக்கு இதுவரைக்கும் நாங்க கிட்டதட்ட பல லட்சம் செலவு பண்ணிட்டோம். அந்த பணத்தையாவது நீங்க கொடுக்கணும் என்றார்களாம். அருவாளால ரத்தம் வர்ற அளவுக்கு கீறிட்டு, ‘அருவா முனை வளைஞ்சிருச்சு. நிமிர்க்க காசு கொடுங்க’ன்னு கேட்பது போல இருக்கே என்று நொந்து கொண்ட கமல், கையை விரித்துவிட்டாராம்.

திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top