பிரான்சில் நடைபெற்று வந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or என்ற கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோனிதாசன், நாயகியாக காளீஸ்வரி சீறினிவாசன், சிறுமியாக கிளாடின் விநாசித்தம்பி ஆகியோர் நடித்திருந்தனர்.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்னைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது.
கேன்ஸில் இந்த திரைப்படத்தை பார்த்த திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் மிகப்பெரிய விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
0 comments:
Post a Comment