நல்லது செய்ய போன விவேக்கிற்கு வந்த பெரும் தலைவலி

விவேக் தற்போது மிக கவனமாக தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சில காலங்களாக தமிழகம் முழுவதும் மரம் நடுவதில் பிஸியாக இருந்த இவர் சமீப காலமாக மீண்டும் அதே புத்துணர்ச்சியுடன் நடிக்க ரெடியாகிவிட்டார்.

இந்நிலையில் இவர் தன் அலுவலகத்திற்கு வெளியே ஒரு காலி இடத்தில் மரக்கன்றுகளை நட்டு அழகுப்படுத்தியுள்ளார். ஏனெனில் அந்த இடம் மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது.

இப்படி நல்லது செய்ய போன இவரை புரிந்து கொள்ளாமல் அந்த மரக்கன்றுகளை சிலர் அழித்துள்ளனர், அது மட்டுமில்லாமல் இவர் புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிக்க பார்க்கிறார் என கூறி வருகிறார்களாம். விவேக் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்...அடப்பாவிகளா, உங்கள எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுப்பா..

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top