உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக எல்லோராலும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விருது விழாவில் விமர்சகர்கள் விருதைத் தட்டிச் சென்றுள்ளது இந்தியத் திரைப்படமான மாஸான் .
68 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதை வாங்கிய ஒரே இந்தியப் படமான மாஸானை இயக்கிய நீரஜ் கெய்வான் என்பவர் இயக்கிய முதல் படம் இது. தனது முதல் படத்திற்கே அங்கீகாரம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நீரஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு ஆகியோர் நடித்துள்ளனர்.
பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களுக்கு இடையே விமர்சன விருதை (எப்.ஐ.பி.ஆர்.இ.எஸ்.சி.) வென்றுள்ள இந்த படம் படத்தை எடுத்தவர்களுக்கும் அதில் நடித்தவர்களுக்கும் அடுத்தடுத்த சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

0 comments:
Post a Comment