அவருக்குப் பதில் இவர்.. டிவி சீரியல் பாணியில் மாறிய வட சென்னை ஹீரோ!

சிம்பு நடிக்க இருந்த வடசென்னை படத்தில் அவருக்கு பதிலாக நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். நேற்று இந்த செய்தியை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இயக்குனர் வெற்றிமாறன் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் சிம்புவை வைத்து வடசென்னை படத்தை ஆரம்பிப்பதாக இருந்தார், அறிவிப்போடு படம் நின்றுவிட்டது. தற்போது விசாரணை படத்தை எடுத்து முடித்த வெற்றிமாறன் கிடப்பில் கிடந்த வடசென்னையை எடுத்து தூசு தட்டி மீண்டும் படம் பிடிக்க வேண்டும் என்று களத்தில் குதித்துள்ளார்.

ஆனால் ஹீரோவை மாற்றி விட்டார். சிம்புவுக்குப் பதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சிம்புவுக்கு நேரம் ரொம்ப நன்றாக வேலை செய்கிறது போல, தொடர்ச்சியாக பிரச்சினைகள் வந்து எடுத்த படத்தை வெளியிடவும் முடியாமல் புதிய படங்களில் நடிக்கவும் முடியாமல், மனிதர் என்னவோ தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

தனுஷ் ட்விட்டர்ல செய்தி சொன்னதெல்லாம் சரிதான். ஆனா ஒன்னு மட்டும் புரியல பொல்லாதவன் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்த போதே இந்தப் படத்தோட கதைய வெற்றிமாறன் சொன்னதா ஒரு அடிஷனல் மெசேஜ் ஒன்ன இலவச இணைப்பா போட்டிருக்காரு.

படத்தில் தனுஷுக்கு ஜோடி போடுகிறார் சமந்தா. 2016ல் படம் ரிலீஸாகுமாம். விரைவில் பிற விவரத்தைச் சொல்கிறாராம் தனுஷ்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top