ஷங்கரை நெருங்கிய லாரன்ஸ் !

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா 2 தமிழ்நாடு முழுவதும் சக்கைப்போடு போட்டது.

இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தெலுங்கு பதிப்பு வெளியாகி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.தெலுங்கு பதிப்பில் இந்த மூன்று வாரத்தில் கிட்டத்தட்ட ரூ. 17.6 கோடி வசூல் செய்துள்ளது.

எந்திரன், ஐ படத்திற்கு பிறகு தெலுங்கு மிகப்பெரிய வசூலை ஈட்டிய படம் என்றால் காஞ்சனா 2 தான் என்று அங்குள்ள விநியோகஸ்தர் நிசாம் தெரிவித்தார்.ஏற்கனவே தமிழ்நாட்டில் எந்திரன் வசூலுக்கு ஈடாக காஞ்சனா 2 வசூல் செய்கிறது என்று குறிப்பிட்டு இருந்தோம்.

ஆக மொத்தத்தில் படத்தின் வசூலை வைத்து பார்க்கும் போது ஷங்கரை நெருங்கி விடுவார் போல ராகவா லாரன்ஸ்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top