“எங்களோட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு இதைவிட பெரிய விஷயமும், பெருமையான விஷயமும் எதுவுமே இல்லை” என்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
“இந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துல 4 சகோதரர்கள் இருப்பதாக சகோதரர் லிங்குசாமி சொன்னார். ஐந்தாவதாக என்னையும் அவர்கள் இந்த நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார் கமல்.
இந்த உரையாடல்கள் இரண்டுமே மார்ச் 1-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ‘உத்தம வில்லன்’ ஆடியோ பங்ஷனில் கேட்டது.
லிங்குசாமியும், கமலும் பேசுவதைக் கேட்டால் என்னமோ இரண்டு பேரும் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லாமல் உத்தம வில்லனை முடித்து விட்டார்கள் என்று தோன்றலாம்.
ஆனால் கமல் செய்த ஒரு சின்ன பப்ளிசிட்டி வெறியால் வெளியில் சொல்லவே முடியாத புழுக்கத்தில் இருக்கிறார்களாம் திருப்பதி பிரதர்ஸ்.
கமல் என்கிற தமிழ்சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையை வைத்து படமெடுக்கும் பாக்கியம் இந்த திருப்பதி பிரதர்ஸ்களுக்கு சந்தோஷத்தையும், பெருமையையும் ஒருசேரக்கொடுத்தாலும் டைட்டிலில் கமல் செய்த பப்ளிசிட்டி வேலையைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம்.
பொதுவாக ஒரு படத்தை இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்தால் ஏதாவது ஒரு செலவையாவது ஒரு ஏற்றிருக்க வேண்டும்.
ஆனால் உத்தமவில்லன் விளம்பர டிசைன்களில் கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் என்கிற பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
அப்படியானால் உத்தமவில்லன் படத்தை கமலும் இணைந்து தயாரிக்கிறாரா? என்றால் அதுதான் இல்லை. பணம் முழுக்க முழுக்க திருப்பதி பிரதர்ஸின் பணம். அவர்களுடைய முதலீட்டில் தான் உத்தமவில்லன் தயாராகி வருகிறது.
அதில் ஒரு ஹீரோவாக மட்டுமே பங்களிப்பு செய்யும் கமல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் டைட்டிலிலும், விளம்பர டிசைன்களிலும் சேர்த்திருக்கிறார்.
அனுபவ நடிகர் கமலின் இந்த நடவடிக்கை தான் திருப்பதி பிரதர்ஸ் மத்தியில் கடுப்பைப் கிளப்பியிருக்கிறது.
அஞ்சு பைசாக்கூட தரலீங்க.., ஆனா பேரு மட்டும் பெருசா போட்டுக்கிறாப்ல.. என்று வருவோர் போவோரிடமெல்லாம் புலம்பித் தீர்க்கிறார்கள் பிரதர்ஸ்.

0 comments:
Post a Comment