தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது.
மேலும் இயல், இசை, நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான பல்வேறு விழாக்களையும் சிறப்புடன் நடத்தி வருகின்றது.
தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் புதிய வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்வதற்காக நாடகம் ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 5 நாடகங்களுக்கு ரூபாய் 7.50 லட்சம் தொகையை தமிழ அரசு வழங்கி உள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நாரத கான சபா ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணியளவில், டி.டி.கே சாலையில் உள்ள சத்குரு ஞானாநந்தா ஹாலில் புராண நாடக விழா நடைபெறுகிறது.
08.03.2015 டி.பாலசுந்தரம் அவர்களின் தமிழரசன் தியேட்டர்ஸ் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது.
தொடர்ந்து 09.03.2015 அன்று மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும் பக்தப்பிரகலாதா நாடகமும்…
10.03.2015 அன்று கே.ஆர்.எஸ்.குமாரின் நாடகக் காவலர் கலைக்கூடம் வழங்கும் அவதாரப்புருஷர் ஸ்ரீ ராமானுஜர் நாடகமும்…
11.03.2015 அன்று ஜான் பாஷாவின் தேவி கலைக்கூடம் வழங்கும் காரைக்கால் அம்மையார் நாடகமும்…
12.03.2015 அன்று நாடகப் பணி அருணகிரியின் கங்கை கலாலயா வழங்கும் கிள்ளிவளவன் காதல் நாடகமும்….
மேடையேற்றம் செய்யப்பட உள்ளன.
அனைவரும் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவினை தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா, உறுப்பினர் செயலாளர் திருமதி. சித்ரா விஷ்வேஸ்வரன்ஏற்பாடு செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment