ஜோதிகாவின் 36 வயதினிலே - மாபெரும் வெற்றி பெற்ற படம்

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் – ஹௌ ஓல்ட் ஆர் யு.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கிய நடிகர் சூர்யா, அப்படத்தை தானே தயாரித்ததோடு ஜோதிகாவை கதாநாயகியாக்கினார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா இந்தப் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஹௌ ஓல்ட் ஆர் யு படத்தை இயக்கிய ரோஷ் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.

தலைப்பு வைக்காமலே மொத்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.

இந்நிலையில் நேற்று சூர்யா ட்விட்டரில் இணைந்தார்.

ட்விட்டருக்கு சூர்யா வந்த சில மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் அவரை ஃபாலோ பண்ண…

சூட்டோடு சூடாக ஜோதிகா நடித்து வந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டார் சூர்யா.

படத்தின் பெயர் – 36 வயதினிலே

10 வயது முதல் 60 வயது வரை உள்ள ஏழு பெண்கள் முதுகைக்காட்டியபடி திரும்பி நின்று கொண்டிருக்க, ஜோதிகா மட்டும் முன் பக்கம் பார்த்தபடி ஒய்யாரமாக நிற்கிறார்.

36 வயதினிலே படம் மே மாதம் வெளியாக உள்ளதாம். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top