கமல்ஹாசனின் புதிய நிறுவனம்

கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியாகி பாடல்கள் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

கமல்ஹாசன் ஏற்கனவே ராஜ்கமல் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பட திரைப்படங்கள் தயாரித்து வரும் நிலையில் தற்போது புதியதாக "ராஜ்கமல் நியூ ஃப்ராண்ட்டியர்" (Raj Kamal New Frontier) என்ற புதிய நிறுவனத்தையும் சமீபத்தில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தன்னுடைய படங்களையும் பிற படங்களையும் வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி கமலின் இந்த புதிய நிறுவனமும், ப்ரைம் மீடியா என்ற நிறுவனமும் இணைந்து 'உத்தம வில்லன்' படத்தை வட அமெரிக்க நாடுகளில் ரிலீஸ் செய்ய உரிமை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஊர்வசி, நாசர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top