ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் கமலின் தசாவதாரம்?

கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்னர் தசாவதாரம் என்ற வெற்றி படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவர் பத்துவிதமான கேரக்டர்களில் நடித்ததால் தசாவதாரம் என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் அவர் தசாவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தசாவதாரம் படத்தில் பத்துவிதமான கேரக்டர்களில் நடித்தது போலவே உத்தம வில்லன் படத்தில் அவர்  பத்து விதமான தொழில்நுட்பத்தில் தன்னுடைய பணியை செய்துள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடனம், பின்னணி பாடகர், தயாரிப்பு, விநியோகிஸ்தர், நடிப்பு என பத்துவித பணிகளை செய்து சாதனை படைத்துள்ளார். ஒரு நடிகர் நடிப்பு மட்டுமின்றி படத்தின் பத்துவித பணிகளையும் செய்வது என்பது உலகநாயகனை தவிர வேறு யாராலும் முடியாதது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், ஊர்வசி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஷ்யாம் தத் ஒளிப்பதிவும், விஜய் ஷங்கர் எடிட்டிங்கும் செய்துள்ளனர். ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவுள்ள இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top