கோவில் கோபுர கலசத்தில் இடி விழுவதால் அந்த கலசம் அதிக மதிப்புள்ள இரிடியமாக மாறி விடுவதாக மக்கள் மத்தியில் ஒரு விஷயம் பரவி வருகிறது. இதை நம்பி பலர் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். இதை கருவாக வைத்து மர்மம் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‘இரிடியம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் புதுமுகம் மோகன் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஆருஷி நடிக்கிறார். இவர் பல தமிழ்படங்களில் நடித்தவர். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பாவா லட்சுமணன், கும்கி அஸ்வின், யோகி பாபு, மதுமிதா, ஐஸ்வர்யா என பலரும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் ஷாய் முகுந்தன். ஒளிப்பதிவை கோபி சபாபதி கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து முடிந்துவிட்டது. சென்சாரில் படம் பார்த்த அதிகாரிகள் படத்தை பாராட்டி ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். விரைவில் ‘இரிடியம்’ திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை குவாடாரா மூவிஸ் தயாரித்துள்ளது.

0 comments:
Post a Comment