எதுக்காக சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை - கௌதம் மேனன்

கௌதம் மேனன் சமீபத்தில் முன்னணி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த போது, துருவநட்சத்திரம் யோஹன் படங்களின் நிலைமை என்ன? சூர்யா, விஜய் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இப்படங்களை நிறுத்தியதற்கு காரணமா? என்று கேள்விகள் கேட்கப்பட்டதாம்.

அதற்கு கௌதம் மேனன், யோஹன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த 2 நாட்களுக்கு முன்பு ரத்தானது. என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை.

ஒரு நடிகர், கதையை நம்பி படம் பண்ணும் போது அப்படத்தின் கதை அவர்களுக்கு முழுமையாக பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் கதை விஷயத்தில் கொஞ்சம் உடன்பாடு இல்லை. இந்தக் கதை வேண்டாம் கெளதம், வேற ஒண்ணு பண்ணலாம் என்று சொன்னார்கள்.

எந்த காரணத்துக்காக இதைப்பற்றி சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்களுடைய கருத்து. அதில் நான் எந்தத்தப்பும் சொல்லமாட்டேன் என்று கூறினாராம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top