விஜய்சேதுபதி, சிம்ஹாவுடன் எஸ்.ஜே.சூர்யா இணையும் இறைவி: அதிகாரபூர்வ அறிவிப்பு

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் அடுத்த படம் இறைவி. பீட்சா, ஜகிர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா மூவருமே ஹீரோவாக நடிக்கிறார்கள். கருணாகரன் காமெடியனாக நடிக்கிறார். இன்னும் ஹீரோயின்கள் முடிவாகவில்லை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இதனை தயாரிப்பாளர் சி.வி.குமார் முறைப்படி அறிவித்துள்ளார்.

ஜிகிதர்தண்டா பாணியில் இதுவும் ஆக்ஷன் காமெடி படம். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சிம்ஹா மூவரும் தனித்தனி இடத்திலிருந்து தனித்தனி காரணங்களுக்காக ஒரே காரியத்தைச் செய்ய ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஒருவரை ஏமாற்றி மற்றவர் அதனை எப்படி சாதிக்க நினைக்கிறார்கள் என்கிற கதை என்பது பட வட்டாரத் தகவல்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top