ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இன்று முதல் அந்த நிகழ்ச்சிக்குப் புதிய தொகுப்பாளராக நடிகை சுதா சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபகாலமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருடைய ‘என்னம்மா இப்டி பண்றீங்களேமா’ என்கிற வாக்கியம் முதலில் விஜய் டிவியில் கிண்டல் செய்யப்பட்டது. அதன்பிறகு அது சினிமா உள்பட பல இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மாற்றம் ஒன்று தான் மாறாதது, இல்லையா! ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஒரு மாற்றம். ஜூன் 1 முதல் நான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம். நிறைய பேரின் வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றத்தை, நல்ல மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு நான் ஜீ தமிழுக்கு நன்றி சொல்வேன். ஏன் இந்த மாற்றம் என்று பலரும் கேட்கிறார்கள். படங்களில் பிஸியாகி விட்டேன். குடும்பப் பொறுப்புகள் உள்ளன. அதனால் விலகவேண்டிய சூழல் வந்தது” என்று கூறியுள்ளார்.
இப்போது லட்சுமி ராமகிருஷ்ணனுக்குப் பதிலாக நடிகை சுதா சந்திரன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 1) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

0 comments:
Post a Comment