சமகால இயக்குநர்களில் சமூக அக்கறை கொண்ட இயக்குநர் – எஸ்.பி.ஜனநாதன்.
இவரது முதல் படமான இயற்கை, அடுத்து இயக்கிய ஈ, கடைசியாய் இயக்கிய பேராண்மை என ஒவ்வொரு படத்திலும் முக்கியமானதொரு பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்.
தற்போது அவர் இயக்கி வரும் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திலும் நிச்சயமாக ஒரு சமூகப் பிரச்சனையைத் தொட்டிருப்பார் என்று நம்பலாம்.
என்ன பிரச்சனை?
புறம்போக்கு என்கிறபொதுவுடமை படத்தில் புரட்சியாளராக நடித்திருக்கிறார் ஆர்யா.
தூக்குத்தண்டனைக் கைதியான அவரது பாத்திரம்தான் படத்தின் மையம்.
சிறை அதிகாரியாக ஷாம்.
தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் தொழிலாளியாக விஜய்சேதுபதி.
புரட்சிப்பெண்ணாக கார்த்திகா.
இவர்களைச் சுற்றி சம்பவங்கள் நிகழ்வதாக பின்னப்பட்டிருக்கிறது திரைக்கதை.
மதுரை பாலு என்கிற பாலுசாமியின் தாக்கத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து திரட்டப்பட்ட பல்வேறு தகவல்களும் பாலுசாமி கதாபாத்திரத்துக்கு மெருகேற்றப்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்தனை சீரியஸான…கனமான ஒரு கதாபாத்திரத்துக்கு ப்ளேபாய் இமேஜ் உள்ள ஆர்யாவை நடிக்க வைத்தது ஏன்?
ஜனநாதனிடம் கேட்டோம்…
“இப்படத்தில் ஆர்யா ஒரு புரட்சியாளராக நடித்துள்ளார். புரட்சியாளன் என்றாலே கறுப்பு நிறத்தில் தாடி வைத்தவர்களாகத்தான் இதுவரை சினிமாவில் காண்பித்து வந்துள்ளனர். ஆனால் அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் ஆர்யாவை நடிக்க வைத்தேன். காரணம், பகத்சிங் போன்ற புரட்சியாளர்கள் ரொம்ப அழகானவர்களாக இருந்துள்ளனர்.
அதனால் ஆர்யா இந்த ரோலுக்கு பொருத்தமாகவே இருந்தார். ஆர்யாவுக்கு ப்ளேபாய் இமெஜ் இருந்தால் என்ன? இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவரா இப்படி நடித்துள்ளார் என்று தோன்றும். அதோடு அவரது இமேஜை மாற்ற இந்தப்படம் உதவும்” என்றார் ஜனநாதன்.
ஆர்யா ஏற்ற கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல, கார்த்திகா ஏற்றிருக்கும் கதாபாத்திரமான குயிலிக்கும் சரித்திரப்பின்னணி உண்டு.
வேலுநாச்சியார் படையில் இருந்தவர் குயிலி. இந்திய வரலாற்றில் முதல் தற்கொலைப்படைப் பெண் அவர். குயிலியின் தியாகத்தை நினைகூர்வதற்காகவே அவரது பெயரை சூட்டியுள்ளார் ஜனநாதன்.
“ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அவரை, ஆக்ஷன் நாயகியாக நடிக்க வைத்திருக்கிறேன். அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் மற்ற இயக்குனர்களும் நடிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது.”
என்ற ஜனநாதன் அடுத்து சொன்ன தகவல் கவனிக்கத்தக்கது.
“இது மல்டி ஹீரோ கதை என்பதால் இந்த நடிகர்களுக்கிடையே ஈகோ வருமோ என்கிற பயமும் முதலில் இருந்தது. ஆனால், ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி ஆகிய மூன்று பேருமே எந்தவித பிரச்சனையும் செய்யாமல் என் மீதுள்ள நம்பிக்கையில் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த 120 நாட்களும் துளியும் ஈகோ என்பது இல்லாத நண்பர்களாக பழகினார்கள். நானும் அவர்களை சமமாக பாவித்துள்ளேன். என் கதைக்கும் நேர்மையாக இருந்திருக்கிறேன்.”
இதுவரை இயக்குநராக மட்டுமே இருந்த ஜனநாதன் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை லைன் புரட்யூஸராக, தன்னுடைய பைனரி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.
கலைஞன் வியாபாரியாக மாறும்போது… கலைஞன் தோற்றுப்போய்விடுவான் என்று சொல்லப்படுவதை பொய்யாக்குவதுபோல் இயங்கி இருக்கிறார் ஜனநாதன்.
“என் தனிப்பட்ட லாபத்துக்காக இந்தப் படத்தை நான் தயாரிக்கவில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் தயாரிப்பாளர்களிடம் கேட்டு கேட்டு செய்வது சற்று இடையூறாக இருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை யூடிவியிடம் இருந்து ஒரு தொகையை வாங்கி நானே தயாரித்து இயக்கியிருக்கிறேன். அதனால் பொறுப்பும் அதிகமானது. அதேசமயம் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. அதனால் எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஆகாமல் நான் நினைத்தபடியே படமாக்கியிருக்கிறேன். இந்தக்கதையையும்… என் நோக்கத்தையும் புரிந்து கொண்டு இந்தப் படத்தை என்னை தயாரிக்கச் சொன்ன யுடிவி தனஞ்செயன் சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.”
படம் பற்றி யுடிவி தனஞ்செயன் என்ன சொல்கிறார்?
“நாங்கள் தயாரித்த படங்களிலேயே இது எங்களுக்கு மிக முக்கியமான படமாக மட்டுமல்ல, பெருமைக்குரிய படமாகவும் இருக்கும். இத்தனை ஆர்ட்டிஸ்ட்களையும் வைத்துக் கொண்டு பிரம்மாதமாக எடுத்திருக்கிறார் டைரக்டர்.”
புறம்போக்கு என்கிற பொதுவுடமை கதையில் சிறைச்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது.
கலை இயக்குநர் செல்வகுமாரின் தலைமையில் 150க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 2 மாதங்கள் சென்னையில் உள்ள பின்னி மில்லை சிறைச்சாலையாகவே மாற்றி உள்ளனர்.
யுடிவி தயாரிப்பில் உருவாகி உள்ள புறம்போக்கு என்னும் பொதுவுடமை படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களுக்கு வர்ஷன் என்ற புதியவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார்.

0 comments:
Post a Comment