தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னன் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் சிகரெட்டை ஸ்டைலாக பிடிப்பதை பார்த்து பலரும் புகைப்பிடிக்க தொடங்கினார். காலப்போக்கில் புகைப்பிடிப்பவனை பார்த்து ‘நீ என்ன ரஜினியா’ என்று கேட்கும் அளவிற்கு சமூகம் வந்து விட்டது.
ஆனால், ரஜினிக்கே வாழ்க்கையில் பட்டு தான் தெரிந்தது, இவை எவ்வளவு கொடியது என்று, ராணா படப்பிடிப்பில் போது ரஜினிக்கு இந்த புகை பழக்கத்தால் உடல் நிலை முடியாமல் போக, அவர் பிழைத்து வந்தாலே போதும் என்ற நிலமை வந்து விட்டது. அவர் தமிழ் நாடு வந்து கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல் வார்த்தை புகைப்பிடிப்பதை விடுங்கள் என்று தான்.
அதேபோல் தான் அதிகமாக சிகரெட் பிடிக்கும் அஜித் கூட, தன் வாழ்வில் ஷாலினி வந்துவுடன் முற்றிலுமாக இந்த பழக்கத்தை விட்டார். தற்போது படங்களில் மட்டும் தான் காட்சிகளுக்கு தேவை என்றால் புகை பிடிப்பார். அதிலும் அட்டகாசம் படத்தின் போது அவர் ’புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு’ என கூறியதாகவே ஒரு வசனம் படம் ஒளிப்பரப்புவதற்கு முன் வரும்.
இதேபோல் சூர்யா, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நிஜ வாழ்க்கையில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்கள் தான். ஆனால், நம் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் நல்ல குணங்களை பார்க்காமல், திரையில் செய்யும் சில தவறுகளை ஹீரோயிசம் என்று எடுத்து கொண்டு நம் வாழ்க்கையை சீரழித்து கொண்டு இருக்கின்றோம்.
ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடித்த வெற்றிமாறன் கூட தற்போது வாழ்வின் அர்த்தம் புரிந்து இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். இவர்களை போல் விஷால், நகுல், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் இந்த கொடிய பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். எந்த ஒரு நடிகரும் தன் ரசிகர் சீரழிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், சினிமாவை பார்த்து நீங்கள் இப்படி செய்வது அவர்களுக்கு வருத்தத்தை தான் ஏற்படுத்தும். திரைப்பிரபலங்களுடன் இணைந்து சினி உலகமும் கூறுகின்றது

0 comments:
Post a Comment