முன்னணி நடிகர்களுக்கு திருப்பம் தந்த படங்கள் ஒரு பார்வை

முன்னணி நடிகர்களுக்கு திருப்பம் தந்த திரைப்படங்கள் ஒரு பார்வை -

தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களும் ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து அதிலிருந்து மீண்டு வந்தவர்களே. அந்த வகையில் அப்படி அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏணியாக இருந்த படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.

ரஜினி

சூப்பர் ஸ்டார் என்ற பெயர் எடுப்பதற்கு முன் ரஜினி தன் திரைப்பயணத்தில் பல கஷ்டங்களை சந்தித்தார். பல படங்களில் இரண்டாம் கட்ட நாயகானகவே நடித்து வந்தார். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் வெளிவந்த டான் படத்தின் ரீமேக்கான பில்லா படமே ரஜினி திரைப்பயணத்தில் பெரிய மாற்றம் உருவாக்கிய படம்.

விஜய்

விஜய் என்ன தான் சினிமா பின்னணியில் வந்தாலும் தன் திரைப்பயணத்தில் முழுமையான வெற்றியை ருசிக்க பல காலங்கள் ஆகிவிட்டது. சினிமாவே வேண்டாம் என்று அவர் நினைத்த நேரத்தில் தான் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் அவரை வந்து சேர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது.

அஜித்

அஜித்தும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு வந்து ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். இவருக்கும் ஒரு வெற்றி வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் வசந்த் இயக்கத்தில் ஆசை மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அஜித் தன் திரைப்பயணத்தில் ருசித்த முதல் பெரிய வெற்றி இது தான்.

சூர்யா

சூர்யா என்றாலே லவ்வர் பாய் என ஒரு இமேஜ் இவரை துரத்தி வர, எப்படியாவது இதை உடைக்க வேண்டும் என்று சில ஆக்‌ஷன் படங்களின் நடித்து தோல்வியடைந்தார். ஆனால், பாலா இயக்கிய நந்தா படம் தான் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை காட்டியது. இப்படத்திற்கு பிறகு தான் தானும் ஒரு நடிகர் என்று காலரை தூக்கி விட்டார்.

விக்ரம்

விக்ரமிற்கு எது திருப்புமுணை என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, தோல்விகளை மட்டுமே விலாசமாக கொண்ட விக்ரமிற்கு, பாலாவின் பார்வை விழ சேதுவாக மீண்டு எழுந்தார். இதன் பிறகு இவர் தொட்டதெல்லாம் ஹிட் தான்.

இதேபோல் இவர்களுக்கு அந்ததந்த தருணத்தில் பல படங்கள் ஹிட் கொடுத்து கரை சேர்த்தாலும், இந்த படங்களை அவர்களே தன் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top