குழந்தைங்க ஸ்கூல்ல அதிகமா வெட்கப்படுறாங்களா? முதல்ல அதை குறைங்க..

குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் மிகவும் வெட்கப்படுவார்கள். ஏனெனில் அங்கு இருக்கும் அனைவரும் புதியவர் என்பதனால் தான். அதுமட்டுமல்லாமல், அழுதுக் கொண்டே, சரியாக சாப்பிடாமல், யாருடனும் சரியாக பேசாமல் இருப்பார்கள். அவ்வாறு இருப்பது நல்ல பழக்கம் அல்ல. ஆகவே குழந்தைகளை மற்றவர்களுடன் எந்த ஒரு வெட்கமும் இல்லாமல், பழக பேச பெற்றோர்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். இப்போது அதற்கான ஒரு சில டிப்ஸை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.

* குழந்தைகளின் மனதில் தோன்றும் அனைத்தையும் வெளிப்படையாக சொல்லும் பழக்கத்தை பழக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளிடம் அதிமான ஸ்ட்ரிட்டோடு இருக்க வேண்டாம். இதனால் அவர்கள் எதையுமே வெளிப்படையாக பேசாமல், யாருடனும் பழகாமல் போய்விடுவார்கள். உதாரணமாக, இப்போது உறவினர் வீட்டிற்கு வென்றால், அங்கு அவர்கள் அங்கிருக்கும் குழந்தைகளோடு ஏதேனும் விளையாட நினைத்தால், விளையாடட்டும். அப்போது அவர்களிடம் விளையாட கூடாது என்று சொல்ல வேண்டாம். இதனால் அவர்கள் மனம் நிறைய பாதிக்…

கப்பட்டு, முக்கியமான இடத்தில் எவ்வாறு பேச வேண்டுமோ, அவ்வாறு பேச முடியாமல் போய்விடும். ஆகவே ஜாலியாக குழந்தைகளுடன் பழகுங்கள்.

* குழந்தைகளிடம் எப்போதும் வெளிப்படையாக நீங்கள் பேசுங்கள். ஏனெனில் நீங்கள் எவ்வாறு பேசுகிறீர்களோ, அவ்வாறே அவர்களும் பேசுவார்கள். மேலும் அவ்வாறு அவர்களோடு பேசும் போது, அவர்கள் எதற்கு வெட்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை அவர்களிடம் இருந்து மாற்றுங்கள். மேலும் பேசும் போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிப் பழகுங்கள்.

* பள்ளிக்கு மட்டும் அனுப்பாமல், அவர்களுக்கு எந்த ஒரு விளையாட்டில் விருப்பமோ, அந்த விளையாட்டில் சேர்த்து விடுங்கள். இதனால் அவர்கள் நிறைய நேரம் மற்றவர்களுடன் இருப்பதால், வெட்கம் போய்விடும். அவர்களது டேலண்ட்டை தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்துங்கள். ஏனெனில் விளையாடும் போது, மற்றவர்களுடன் நல்ல ஒற்றுமை இருந்தால் தான் வெற்றியை அடைய முடியும். எனவே அவற்றை அவர்களே தெரிந்து புரிந்து அனைவரிடமும் நன்கு நடக்கப் பழகிக் கொள்வார்கள்.

* குழந்தைகளை எப்போதும் தனியாக விட்டு செல்ல வேண்டாம். ஏனெனில் வெட்கப்படும் குழந்தைகள் அனைத்தும், எப்போதும் தனிமையைத் தான் விரும்புவார்கள். ஆகவே அவர்களை எங்கேனும் வெளியே அழைத்துச் சென்று, அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
ஆகவே இவ்வாறெல்லாம் செய்து வந்தால், உங்கள் குழந்தை எப்போதும் வெட்கப்படாமல், எப்போதும் தைரியமாக இருப்பார்கள். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு பழகுங்கள். இவ்வாறு கேட்டு வந்தால், அவர்கள் தற்கோது எவ்வாறு நடக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். சொல்லப்போனால், குழந்தைகளிடம் ஒரு நண்பன் போல பழகி வாருங்கள்.


CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top