அன்னக்கிளி படத்திலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோதும், 16 வயதினிலே படம்தான் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. அதையடுத்து, குறுகிய காலத்தில் மெகா காமெடியனான அவர், ஓரிரு படத்தில் ஹீரோ மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், சமுத்திரம், பாபா படங்களுக்குப்பிறகு அதிகப்படியான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கவுண்டமணி, பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்துக்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில, சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது வாய்மை, 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படங்களில் நடித்தபோது, படப்பிடிப்பு 6 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றால், 5.30 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி வந்தாராம் கவுண்டமணி.
மேலும், வாய்மை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் அவர், 17 மணி நேரம் இடைவிடாமல் டப்பிங் பேசிக்கொடுத்தாராம். அதோடு, ஒவ்வொரு
காட்சியில் தான் நடித்து முடித்ததும், அதை பார்த்துக்கொண்டு நிற்பவர்களிடம், எப்படி நான் நல்லா நடிச்சேனா? என்று தனது நடிப்பு குறித்து கருத்து கேட்கிறாராம் கவுண்டர். அவர் இப்படி கேட்பதைப்பார்த்து, ஒரு மிகப்பெரிய நடிகர், இப்போதும் புதுமுக நடிகர் போன்று தனது நடிப்பு குறித்து சாதாரண நபர்களிடம் கூட கருத்து கேட்கிறார். அந்த அளவுக்கு தனது தொழில் மீது பக்தியும், அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கிற உறுதியுடனும் கவுண்டமணி செயல்படுகிறார் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.

0 comments:
Post a Comment