பிக்கு - தந்தை மகளுக்கு இடையிலான பாசப் போராட்டம்: - வெற்றியும் கண்டிருக்கிறார்


இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒட்டாமல் தனிமையை நாடும் இந்த கால கட்டத்தில் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு துணிச்சலாக படம் இயக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பிக்கு பட இயக்குனர் சுர்ஜித் சிங். கமர்சியல் படங்கள் ஒரு புறம் வந்த வண்ண இருந்தாலும் இந்த மாதிரி குடும்ப படங்களும் அவ்வப் போது இந்தியில் வருவது மாற்றத்தின் அறிகுறியே. நடிகை வித்யா பாலன் துணிந்து கதையின் நாயகியாக நடித்து படம் வெற்றி பெற்றதும் மற்ற இந்தி நடிகைகளும் அவர் பாதையிலேயே துணிந்து பயணம் செய்து வருகிறார்கள் இதனை நல்ல மாற்றத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்வோம்.
 
ஒரு தந்தை (அமிதாப் பச்சன்) மகள் (தீபிகா படுகோனே) ஒரு டாக்ஸி டிரைவர் (இர்பான் கான்) இம்மூவரைச் சுற்றியே பெரும்பான்மையான கதை நகருகிறது. பிக்கு என்னும் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா ஒருபக்கம் வேலை மறுபுறம் குடும்பம் என் இரண்டையும் ஒருசேர கவனித்துக் கொள்ள கடுமையாக உழைக்கிறார். இவரது வயதான அப்பா பாஸ்கர் பானர்ஜி (அமிதாப்) யை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார். படத்தில் அப்பா மகளுக்கு இடையிலான பாசம் நெகிழ வைக்கிறது.

ஒரு நல்ல நாளில் தங்கள் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு அப்பாவும் மகளும் ஒரு டாக்சியில் பயணித்து செல்கின்றனர் . டாக்ஸி ஓட்டுனராக ராணா ( இம்ரான் கான் ) வருகிறார். அதற்குப் பின் நடப்பதை கொஞ்சம் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்தி பட உலகில் 1௦௦ கோடி வர்த்தகம் தரும் கமர்சியல் படங்களில் நடிக்கும் தீபிகா பிகு படத்தின் மூலம் தனக்கு நடிக்கவும் வரும் என்பதை இன்னொரு முறை அழுத்தமாக இப்படத்தின் மூலம் கூறி இருக்கிறார். மனிதரின் நடிப்பைப் பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாது..ஒரு தந்தையின் கேரக்டரை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். படத்திற்கு படம் இவரின் நடிப்பு திறன் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர சற்றும் குறையவில்லை.

கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார். படத்தின் கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது இவரது வேலை. குறைவான கேரக்டர்களை வைத்து படத்தை அற்புதமாக கொண்டு செல்கிறார். ஆங்காங்கே சில சமூகக் கருத்துகளையும் முன்வைத்து சொல்லி அடித்திருக்கிறார் இந்த கில்லி. கலை ரீதியில் மட்டுமல்ல வசூல் ரீதியிலும் இது ஒரு நல்ல வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top