2 வருடங்கள் அமைதிக்குப் பிறகு மீண்டும் ‘தெனாலிராமன்’ படத்தில் ஹீரோவாக ரீ-எண்ட்ரி கொடுத்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. அவரது வழக்கமான சரித்திர காமெடிப்படமான அதுவும் கூட நல்ல வசூலோடு ஹிட்டானது.
இப்போது மீண்டும் அதே ஏரியாவுக்குள் போகாமல் சமூகப்படமாக தயாராகியிருக்கும் ‘எலி’ படத்தில் ஹீரோவாகியிருக்கிறார். இப்பத்தான்யா பழைய வடிவேலுவை பார்க்க முடியுது என்று ட்ரெய்லரை பார்த்த உடனே சொல்லத் தோன்றியது.
‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனே இயக்கும் இப்படத்தில் வடிவேலுவுடன் சதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைக்க சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சதீஷ்குமார், அமர்நாத் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து இம்மாதக் கடைசியில் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நேரத்தில் படத்தின் புரமோஷனுக்காக ‘Talking Eli’ என்கிற மொபைல் கேம் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் வடிவேலு.
படத்தை பத்தி மட்டும் கேள்விகள் கேட்கவும் என்று பி.ஆர்.ஓ நிகில் முருகன் ஆரம்பித்து வைக்க “ஆமாண்ணே எதையாவது ஏடாகூடமாக் கேட்டு வம்புல மாட்டி விட்டுடாதீங்க…” என்று தனக்கே உரிய ஸ்டைலில் பேச ஆரம்பித்தார் வைகைப்புயல்…
“மக்கள் மத்தியில போனா எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டுறாங்க. எதுக்கு இவ்ளோ கேப்பு விடுறீங்கன்னு கேட்கிறாங்க. கெட்டவார்த்தை மட்டும் தான் போட்டு திட்டல. அதனால தான் உடனே நாம ஒரு படம் நடிச்சாகணும்னு இந்த எலி படத்தை ஒப்புக்கிட்டேன். ஒரே ஒரு கருத்தை டைரக்டர் சொல்லிருக்கார். அது என்னங்கிறதை நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. வழக்கமான படம் மாதிரி இருக்கும். குடும்பத்தோட வந்து ஜாலியா ரசிச்சு, சிரிச்சுட்டுப் போகலாம்.
சதா தான் இந்தப்படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ஆனா எனக்கு அவங்க கூட டூயட் இல்ல. அவங்க ஒரு கேரக்டரா வர்றாங்க. காமெடியன் படம்னாலே ஹீரோயின்கள் ஓடத்தானே செய்றாங்க. எங்கூட நடிக்கிறதுக்கு நெறைய ஹீரோயின்களை கேட்டுப்பார்த்துருக்காங்க. யாருமே ஒப்புக்கல. போனாப் போகட்டும். யாரு நடிக்க விருப்பப்பட்டு வர்றாங்களோ அவங்களை நடிக்க வெச்சுட்டுப் போறோம். வேற ஸ்டேட்டுக்கு போய் தேடுனா ஆயிரம் நடிகைகள் ஓடி வருவாங்க.
1960-70 காலகட்டங்களில் நடக்கிற கதையா இருந்தாலும் இது பீரியட் படம் இல்லை. என்றவரிடம் எலின்னு டைட்டில் வெச்சிருக்கீங்களே..? அப்போ இது புலி படத்துக்கு போட்டியான்னு ஒரு கேள்வி பறந்தது.
இந்த வம்பிழுத்து விடுற வேலை தானே வேணாங்கிறது. அவங்க ‘புலி’ன்னு எடுக்கிறாங்க. நாங்க ‘எலி’ன்னு எடுக்கிறோம். அது அந்தப்பக்கம் போகுது. இது இந்தப்பக்கம் போயிட்டு போவுது.அது ஒரு டைட்டில் அவ்ளோதான். மத்தபடி ‘புலி’ படத்துக்கு போட்டியெல்லாம் இந்தப்படம் இல்லை. அடுத்து ‘கரப்பான் பூச்சி’ன்னு கூட டைட்டில் வைப்போம். டைட்டிலுக்கா பஞ்சம் என்றவரிடம் அந்த இரண்டு முக்கியமான கேள்விகளை கேட்கவில்லை என்றால் பிரஸ்மீட் வைத்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே என்கிற தொணியில் வந்து விழுந்தன.
முதல் கேள்வி ”மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா”? என்ற கேள்வி. அதற்கு பதிலளித்த வடிவேலு ” இப்போதைக்கு இந்தக் கடையை தொறந்து வெச்சிருக்கேன். நல்லா வியாபாரம் ஆகுது. அந்தக் கடையை மூடி வெச்சிருக்கேன். தேவைப்பட்டா அதையும் தொறந்து வைப்பேன். வந்தாலும் வருவேன். வராமலும் இருப்பேன். நம்ம கையில என்னண்ணே இருக்கு என்றார்.
“சகாப்தம் படத்தை பார்த்தீர்களா”? என்பது தான் அடுத்த ஹைலைட் கேள்வி?
ரெண்டாவது கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத வடிவேலு ”ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்கீங்க போலிருக்கு” என்றவர் ”நான் நடிச்ச படத்தையே இன்னும் பாக்கல. அதுக்கே எனக்கு நேரமில்லேண்ணே…” என்று சிரித்துக் கொண்டே சமாளித்தார்.
சமாளிக்கிற வித்தையை வடிவேலுவுக்கு சொல்லியாத்தரணும்?

0 comments:
Post a Comment