மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா...? -அரசியலில் வடிவேலு

வடிவேலு, சதா மற்றும் பலர் நடிக்கும் 'எலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன், படத்தின் நாயகன் வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது வடிவேலு பேசியதாவது, “வெளிய போனால் ஜனங்க கன்னா பின்னான்னு திட்டறாங்க, ஏம்பா கேப் விடறன்னு கேட்டாங்க. ஏதாவது படத்துல டிராக் பண்ணி நடிச்சம்னா, படம் ஏதாச்சும் ஆச்சுன்னா தப்பாயிடும். அதனால முழுதா பண்ண்ணும்னு நினைச்சால் இந்தப் படத்தைப் பண்ணேன். செந்தமிழுக்கு அப்புறமா ஒரு லந்துத் தமிழ் பேசி இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்.

இந்தப் படத்துல நான் சதாவோட டூயட்லாம் பாடிக்கிட்டு இல்லை. அவங்கள ஒரு சைடா லவ் பண்ற மாதிரி கதை, அப்படி கனவுல காதல் பண்ணி, ஹிந்திப் பாட்டுப் பாடிக்கிட்டுப் போயிட்டிருக்கேன். கதைக்குத்தானே படத்துல ஹீரோயினை நடிக்க வைக்கிறோம். காமெடியன் கூட கதாநாயகிங்க நடிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்கன்னா வேற யாரையாவது போட்டு எடுத்துக்கப் போறோம்.

எலின்னு படம் எடுக்கறோம், சிங்கம்னு படம் எடுக்கறாங்க, புலின்னு படம் எடுக்கறாங்க, புலி பாட்டுக்கு ஒரு பக்கம் போகப் போகுது, இந்தப் எலி ஒரு படம் போகுது, புலிக்குப் போட்டி எலியான்னுலாம் கேட்டு உரண்டை இழுக்கக் கூடாது.

இந்தப் படத்தை குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் பார்த்து சிரிக்கலாம். ஒரு எலி என்னவெல்லாம் பண்ணுமோ அது எல்லாத்தையும் இந்தப் படத்துல பண்ணியிருக்கேன்.

அரசியலில் இறங்குவீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, “என்ன வேணா நடக்கலாங்க, பார்ப்போம், எலி திடீர்னு எந்தப் பக்கம் திரும்பும்னு தெரியாது. அந்தக் கடையை மூடி வச்சிருக்கோம், இந்தக் கடையை திறந்துருக்கோம், பார்ப்போம்,” என வடிவேலு பேசினார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top