மாஸ் - கதையை யோசித்ததற்காகவே ஸ்பெஷலாக பாராட்டலாம்

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் டிரைலரிலேயே செமயாக மிரட்டியிருந்தார்கள். ரெண்டு நிமிட டிரைலரிலேயே கலக்கியவர்கள் முழு படத்தில் எப்படி தாம் தூம் ஆக்கியிருக்கிறார்களா… பார்க்கலாம்…

மாஸ் மாசு என்கிற மாசிலாமணி நண்பன் (ப்ரேம்ஜி) உடன் சேர்ந்து அவ்வப்போது சின்ன சின்ன கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவன். தாதா ரெட்டியின் பணத்தை ஆட்டையப் போடும் போது ரெட்டி ஆள்களிடம் சிக்கிக் கொள்கிறான். அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்லும் போது நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறான் மாசு. நண்பன் அந்த விபத்தில் இறந்து போகிறான். அதன் பிறகு மாசிலாமணிக்கு பேய்கள் கண்களுக்கு தெரிகின்றன. அவர்களிடம் அவனால் பேசவும் முடிகிறது. அந்த பேய்களிடம் ஒரு டீல் போட்டுக் கொள்ளும் மாசு அவைகளை பயன்படுத்தி காசு சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். இது தெரிந்த அவனது காதலி அவனிடம் கோபித்துக் கொள்கிறாள். திடீரென என்ட்ரி கொடுக்கும் ஷக்தி என்னும் பேய் மாசிலாமணியைப் பயன்படுத்தி சிலரை பழிவாங்க முயற்சிக்கிறது. அது ஏன்…? அந்த பழிவாங்கும் செயல்களுக்கு மாசிலாமணி துணை போனானா என்பதை அமானுஷ்ய பின்னணியில் சொல்கிறது மாசு என்கிற மாசிலாமணி.

பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள். ஒரு சூர்யா நிஜ சூர்யா என்னும் மாசிலா மணி. இன்னொரு சூர்யா ஷக்தி என்னும் ஆவி. இருவருக்கும் என்ன தொடர்பு என்பதை ஏறக்குறைய படம் முடிகிற நேரத்தில்தான் ப்ளாஷ்பேக்குடன்சொல்கிறார்கள். இன்னொரு விபத்தில் ஆவிகளை பார்க்கும் அவைகளுடன் பேசும் சக்தியை சூர்யா இழந்துவிட்டு தவிக்கும் தவிப்பு ரசிகர்களை உருக வைத்துவிடுகிறது. மாசிலாமணி சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா. நர்ஸாக நடித்திருக்கிறார். இலங்கை தமிழரான ஷக்தி சூர்யாவுக்கு ஜோடியாக பிரணிதா. ஷக்தி, ப்ரணிதாவுக்கு ஏற்படும் முடிவு படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துவிடுகிறது. படம் முழுக்க சூர்யாவுடனே வலம் வருகிறார் பிரேம்ஜி. பிரேம்ஜியின் வழக்கமான அலப்பறைகள் இல்லாமல் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு இதுவரை பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கும் கூட இனிமேல் அவரை பிடித்துவிடும்.

வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியை சீரியஸ் வில்லனாக காட்டினாலும் ஏனோ நம்ம முடியவில்லை. பேய்களாக வருகிறார்கள் கருணாஸ், ஸ்ரீமன், சண்முக சுந்தரம் போன்றோர். ரியாஸ்கானுக்கு நல்ல ஒரு கதாபாத்திரம். அதில் சிறப்பாக செய்திருக்கிறார். நக்கலும் நய்யாண்டியுமாய் வந்து போகிறார் காவல்துறை ஆய்வாளரான பார்த்திபன். பேயாக சில காட்சிகள் வரும் நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகளில் திரையரங்கமே அதிருகிறது.

யுவன் இசையில் தெறிக்குது மாஸ் பாடல் ஆட வைக்கும் ரகம். நான் அவள் இல்லை பாடல் ரசிக்க வைக்கிறது. வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கும் பிறவி பாடல் மனதை வருடிச் செல்கிறது. ஒளிப்பதிவு ராஜசேகர். படம் முழுக்க கலர் கலர் கலர்புல்தான்… அமானுஷ்யங்களை கொண்ட படம் என்றாலும் பேய் படத்திற்குரிய பின்னணி இசை ஸ்பெஷல் எபெக்ட் ஏதும் இல்லாமல் சாதாரண படம் போன்று இருப்பதே இந்தப் படத்தில் ஒரு பெரிய வித்தியாசம்தான். இடையிடையே விஜய் படத்தின் பாடல் ‘மேகமாய் வந்து போகிறேன்…’, அஜித் படத்தின் வசனங்களையும் கேட்க முடிகிறது.

சிக்ஸராக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. பேய் படம் என்றாலும் சீரியஸ் பேய் படமாகவும் இல்லாமல் காமடி பேய் படமாகவும் இல்லாமல் சில பேய்களும் அவைகளுக்கு உதவுவதுமாக கதையை யோசித்ததற்காகவே ஸ்பெஷலாக பாராட்டலாம். வெங்கட்பிரபு சூர்யா இருவருக்குமே மாஸ் முற்றிலும் புதிய ஆட்டம்தான்…!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top