சோன்பப்டி படம் ஒரு அலசல்....!

தமிழ் சினிமாவின் எதிர்காலமே சில நாட்களாக குறைந்த பட்ஜெட் படங்களை நம்பி தான் இருக்கின்றது.

அந்த வகையில் குறைந்த பட்ஜெட் படம், பெண் இயக்குனர், வழக்கு எண் 18/19, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் புகழ் ஸ்ரீ என பெரும் எதிர்ப்பார்ப்புடன் நம்பி (வடிவேலு ஸ்டைலில் நினைத்து கொள்ளுங்கள்) எதிர்பார்த்த படம் தான் சோன்பப்டி

கதை

படத்தில் சல்லடை போட்டு தேடினாலும் இப்படி ஒரு விஷயம் இருக்குமா? என்றால் பெரிய கேள்விக்குறி வந்து நிற்கின்றது, இருந்தாலும் விமர்சனம் என்பதற்காக கூறி தானே ஆக வேண்டும்.

Softwareல் வேலைபார்க்கும் ஸ்ரீக்கு முதல் காட்சியிலேயே திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது. இவருக்கு 3 நண்பர்கள், அதில் ஒருவர் ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக் செல்ல முயற்சி செய்து வருகின்றார்.

இதை தொடர்ந்து இடைவேளை வரை படம் எதை நோக்கி செல்கின்றது என்றே தெரியவில்லை, பின் ஒரு நாள் ஸ்ரீ மற்றும் அவருடைய வருங்கால மனைவி நிரஞ்சனா Shopping செல்ல, அவர்கள் காரில் தெரியாமல் ஒரு சிறுவன் ஏறி கொள்கிறான்.

அவன் யார் என்று கண்டுப்பிடிப்பதற்குள், ஒரு கும்பல் இவர்களை கடத்துகின்றது. இதே நேரத்தில் ஒலிம்பிக்கிற்கு Training எடுக்கும் ஸ்ரீயின் நண்பரை போலிஸ் கைது செய்கின்றது. அந்த சிறுவன் யார்? எதற்காக அந்த கும்பல் இவர்களை கடத்துகின்றது? ஸ்ரீயின் நண்பர் போலிஸிடம் இருந்து எப்படி ரிலிஸ் ஆனார்? இத்தனை கேள்விகளுக்கு அந்த சிறுவன் மூலம் விடை கூறி முடிப்பதே தான் இந்த சோன்பப்டி.

படத்தை பற்றிய அலசல்

ஸ்ரீ என்ன ஆனது உங்களுக்கு? இரண்டு தரமான படத்தை கொடுத்து விட்டு இப்படி ஒரு படத்தில் எப்படி நடித்தார்? என்பதே அனைவருடைய கேள்வியும். படத்தில் காமெடி என்று வைத்த இடத்தில் எல்லாம் கோபமும், Serious

என நினைத்த இடத்தில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிரிப்பு தான் வருகின்றது.

போஸ்டர்களில் சோன்பப்டி என்று சிறுவனை காட்ட, ஏதோ குழந்தைகளுக்கான படம் என்று நினைத்து சென்றால், அந்த பையன் பாவம் நா ஏதாவது செய்கிறேன்..நீங்கள் படம் பிடித்து கொள்ளுங்கள் என்ற அளவிலேயே நடித்துள்ளான்.

க்ளாப்ஸ்

கண்டிப்பா எந்த இடத்திலையும் சொல்ல முடியல இயக்குனர் சிவானி அவர்களே...கிளைமேக்ஸில் ஏதோ Message சொல்ல முயற்சி செய்ததற்கு வேண்டும் என்றால் ஒரு க்ளாப்ஸ்

பல்ப்ஸ்

படத்தில் எங்கு திரும்பினாலும் பல்ப்ஸ் தான், கேமரா, இசை என்று எதிலும் மக்களை கவரவில்லை.

மொத்தத்தில் சோன்பப்டி மன தைரியம் இருந்தால் வாங்கி சாப்பிடுங்கள்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top