கமல் இருவேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘இந்தியன்’. 1996–ல் இப்படம் வந்தது. நாயகியாக மனிஷா கொய்ராலா நடித்து இருந்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘பச்சைகிளிகள் தோளோடு‘, ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா’, ‘கப்பலேறி போயாச்சு’, ‘மாயா மச்சந்திரா’, ‘அக்கடானு நாங்க’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.
‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான கதையை டைரக்டர் ஷங்கர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஏ.எம்.ரத்னமும், ஷங்கரும் சந்தித்து பேசி இந்த படம் குறித்து இறுதி செய்துள்ளனர். ஷங்கர் தற்போது ‘எந்திரன்’ 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதில் ரஜினியை நாயகனாகவும், கமலை வில்லனாகவும் நடிக்க வைக்க விரும்பினார். கமல் ஏற்கவில்லை. இதையடுத்து வில்லன் கேரக்டருக்கு இந்தி நடிகர் ஷாருக்கானை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தோடு ‘இந்தியன்’ 2–ம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியிலும் அவரது உதவி இயக்குனர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment