ஜூராஸிக் பார்க் படத்தில் ஆமையின் உடலுறவு சத்தத்தை குட்டி டைனோஸரின் குரலுக்காக பயன்படுத்தினேன்: ஒலி இயக்குனர்

பாடப்புத்தகத்தில் புகைப்படமாக பார்த்த டைனோசரை உயிரோடு கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம் ’ஜூராஸிக் பார்க்’. நம்மில் பலர் இப்போதும் டி.வி.,யில் அந்தப் படத்தைப் போட்டால் சலிக்காமல் பார்ப்பதற்கு காரணம் கிராபிக்ஸ் உள்ளிட்ட அத்திரைப்படத்தின் மலைக்க வைக்க தொழில்நுட்ப விஷயங்கள். ஆனால் அதன் தொழில் நுட்பம் குறித்து சமீபத்தில் வெளியான தகவல் ’ஜூராஸிக் பார்க்’ ரசிகர்களை வெட்கப்பட வைத்துள்ளது.

1993-ம் ஆண்டு வெளியான ‘ஜூராஸிக் பார்க்’ படத்தில் சமையலறைக்குள் 2 குட்டி டைனோசர்கள் நுழைந்து உருமும் காட்சியும், அந்த சத்தத்தைக் கேட்டு ஒரு குட்டிப் பையனும் அவனது அக்காவும் சத்தம் போடாமல் மரண பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருக்கும் காட்சியும் நிச்சயம் நமக்கு நினைவிருக்கும்.

சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல செய்தி வலைதளத்திற்கு அளித்த பேட்டியில் அந்தப் படத்தின் ஒலி வடிவமைப்பளரான கேரி ரிட்ஸ்டார்ம், சமையலறைக் காட்சியின் போது ஒரு குட்டி டைனோசரின் குரலுக்காக 2 ஆமைகள் உடலுறவு கொள்ளும் போது எழுப்பும் சத்தத்தைப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு டைனோசருக்கு கழுதை, பூனை, குதிரை, நாய் என்று பல விலங்குகளின் குரலை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூராஸிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் வெளியாகிறது. இந்த படத்திற்கான டிரைலரிலும் ’குட்டி டைனோசர்’ இருக்கிறது. அதற்கு யார் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்....... 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top