மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் நடிப்பில் வெளியான 'பம்பாய்' திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
ஆனால், அப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானது விக்ரம் தான் என்பது தெரியுமா?
'புதிய மன்னர்கள்' படத்துக்காக தலைமுடி எல்லாம் வளர்த்து நடித்துக் கொண்டிருந்தார் விக்ரம். அப்போது மணிரத்னம் "'பம்பாய்' என்ற தலைப்பில் ஒரு படம் பண்ணுகிறேன். அதில் ஹீரோவாக பண்றியா" என்று கேட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து விக்ரம், மனிஷா கொய்ராலா இருவரையும் வைத்து போட்டோ ஷுட் எல்லாம் பண்ணினார்கள். 'புதிய மன்னர்கள்' படப்பிடிப்பு பாதி தான் முடிவடைந்து இருந்தது. அச்சமயத்தில் "'பம்பாய்' கதைப்படி உனக்குத் தாடி இருக்கக் கூடாது" என்று மணிரத்னம் கூறியிருக்கிறார்.
அச்சமயத்தில் 'புதிய மன்னர்கள்' படத்தையும் பாதியில் விடமுடியாது. ஆனால், மணிரத்னம் தாடி இருக்கக் கூடாது என்று சொல்லுகிறாரே என்று விக்ரமுக்கு மிகப்பெரிய நெருக்கடி. மணிரத்னம் "சரி, அங்கே பாதி படம் பண்ணிட்டே. அதில் நடிப்பதுதான் முறை. அப்புறம் பார்ப்போம்" என்று கூறிவிட்டு, அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்து 'பம்பாய்' படத்தை இயக்கினார்.
அப்படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், 'ராவணன்' படத்தில் நடித்தார். இருப்பினும் 'பம்பாய்' படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, இப்போது வரை மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் விக்ரம்.

0 comments:
Post a Comment