வாழு அல்லது வாழ விடு - அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் உள்ளனர், ஆனால் இதில் ஒரு சில நட்சத்திரங்கள் தான் காலம் கடந்து மின்னுகின்றனர். அந்த வகையில் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் திரையுலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பவர் தான் அஜித்.

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம், ஆனால், சினிமா பிரபலங்களே பலரும் ரசிகர்களாக இருப்பது அஜித்திற்கு மட்டும் தான், ஒரு நடிகன் என்றால் படம் நடித்தோமா? சம்பாதித்தோமா? என்றில்லாமல், தன் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர அதை அறுக்கும் ஆயுதமாக பயன்படுத்தாமல் ஆக்கும் ஆயுதமாக பயன்படுத்தவே எண்ணி தன் மன்றங்களை எல்லாம் கலைத்தார். ஆனால், அவர் ரசிகர்களின் மனதில் இருந்து அவரை கலைக்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நான் கொடுத்த ப்ளாப் படங்கள் போல் வேறு யாரும் கொடுத்தது இல்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால், இதையும் தாண்டி அஜித்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அஜித் என்றும் வெளிப்படையானவர், எளிமையானவர், தன் தோற்றத்தை கூட மறைக்காதவர், வாழு அல்லது வாழ விடு என்று கொள்கையுடன் வாழும் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top