சூர்யாவுடனான நட்பின் விரிசலுக்கு இது தான் காரணம் - மனம் திறந்த கௌதம் மேனன்

என்னை அறிந்தால் படத்தின் வெற்றி கௌதம் மேனனை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து இவர் சிம்பு, விக்ரம் படங்கள் என பிஸியாக விட்டார்.

இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுடன் தான் இயக்கவிருந்த துருவ நட்சத்திரம் படம் ஏன் கைவிடப்பட்டது என தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார்.

இதில் ‘நான் எப்போதும் 75% கதை தான் நடிகர்களிடம் கூறுவேன், பிறகு படப்பிடிப்பின் போது தான் மீதி கதையை உருவாக்குவேன், ஏனெனில் இந்த ஹீரோ கதைக்கு செட் ஆகிட்டாரா? அல்லது ஏதும் மாற்ற வேண்டுமா? என்று யோசித்து முடிவெடுப்பேன்.

அதே தான் துருவ நட்சத்திரம் படத்திலும் நடந்தது, இதற்கு முன்பு காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் இதே பாணியில் தான் எடுத்தேன், ஆனால், என்னமோ சூர்யாவிற்கு இந்த முறை இதில் விருப்பம் இல்லை போல.

ஆனால், இதை அவர் என்னிடம் கூறியிருக்கலாம், வெளிப்படையாக அறிவித்தது ஏமாற்றத்தை தான் தந்தது’ என கூறியுள்ளார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top