காஷ்மீரின் தேசியக் கொடி பற்றி யாருக்கு தெரியும்..??

பிரதமர் மோடிக்கு முன்னால் இந்திய தேசிய கொடியுடன் இன்னொரு கொடி இருப்பதை பார்த்து விட்டு ஏதோ பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் போது அந்த நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசும் போது எடுத்த படம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..????

அது தான் இல்லை.

காஷ்மீரில் PDP- BJP கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

பிறகு அது என்ன இந்திய தேசிய கொடியுடன் சிவப்பு நிறத்தில் இன்னொரு கொடி என்ற சந்தேகம் இங்கே உங்களுக்கு எழும்.

அது வேறொன்றுமில்லை…

காஷ்மீரின் தேசிய கொடி தான் அந்த கொடி.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்துடன் கூடிய அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவை மாத்திரம் தான் நாம் இது வரை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் இது வரை எந்த மாநிலத்துக்கும் இது வரை வழங்கப்படாத ஒரு சிறப்பு உரிமம் தான் காஷ்மீர் மாநிலத்துக்கான தனி தேசியக் கொடி.

இத்தகைய சிறப்பு அந்தஸ்துகள்,தேசியக் கொடிக்கான உரிமம் ஆகியவற்றை காஷ்மீருக்கு இந்திய அரசு வழங்கியிருப்பதன் மூலம் காஷ்மீர் என்பது தனித்த தேசியம் என்பதை மறைமுகமாக இந்திய அரசு ஒப்புக் கொண்டதன் அடையாளமாக கருதப்படுகிறது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top